பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு

Added : அக் 11, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியத்திற்குட்பட்ட ஓட்டு எண்ணும் மையங்களில் கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.திருவெண்ணெய்நல்லுார் காந்தி நினைவு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு கட்டமைப்புகளை கலெக்டர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள்,

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியத்திற்குட்பட்ட ஓட்டு எண்ணும் மையங்களில் கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.திருவெண்ணெய்நல்லுார் காந்தி நினைவு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு கட்டமைப்புகளை கலெக்டர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, தடுப்புக் கட்டை உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டார்.மேலும் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வருகை புரிபவர்கள் கட்டாயம் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவதை உறுதி செய்திட வேண்டும்.கண்காணிப்பு கேமரா வாயிலாக ஓட்டு எண்ணும் மையம் முழுதையும் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களை கழற்சி முறையில் பணியமர்த்திட வேண்டும்.கேமரா வாயிலாக பதிவாகும் அனைத்து பதிவுகளையும் பாதுகாப்பான முறையில் பாதுகாத்து வைத்திட வேண்டுமென அறிவுரை வழங்கினார்.மேலும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறையினர் எக்காரணத்தினைக் கொண்டும் வெளிநபர்கள் உள்ளே வராதவாறு விழிப்புடன் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.முகவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரின் அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரஸ்வதி, ராம்குமார் தாசில்தார் ஆனந்தன், டி.எஸ்.பி., (பயிற்சி) ஆனந்தராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X