பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறித்து தேர்தல் பார்வையாளர் ஆய்வு

Added : அக் 11, 2021
Share
Advertisement
சின்னசேலம : சின்னசேலம் ஒன்றியத்தில் ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.சின்னசேலம் ஒன்றியத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் 218 ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்தது. இதையடுத்து, ஓட்டுப்பெட்டிகள், ஓட்டு எண்ணும் மையமான சின்னசேலம் அடுத்த வாசுதேவனுார் தனியார் பொறியியல் கல்லுாரியில் ஸ்ட்ராங் ரூமில் வைத்து

சின்னசேலம : சின்னசேலம் ஒன்றியத்தில் ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.சின்னசேலம் ஒன்றியத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் 218 ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்தது.

இதையடுத்து, ஓட்டுப்பெட்டிகள், ஓட்டு எண்ணும் மையமான சின்னசேலம் அடுத்த வாசுதேவனுார் தனியார் பொறியியல் கல்லுாரியில் ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், மாவட்ட தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வில், கல்லுாரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அங்குள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிவேலிடம் கேட்டறிந்தார்.மேலும், கல்லுாரியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் பாதுகாப்பு போலீசார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X