சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

Added : அக் 11, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அரசு ஊழியர் வீட்டில் பீரோவை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி சுந்தரவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார், 40; இவர், ஊராட்சி ஒன்றிய தணிக்கை பிரிவு அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, மேலுார் தனியார் பொறியியல் கல்லுாரியில் ஓட்டுப்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அரசு ஊழியர் வீட்டில் பீரோவை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி சுந்தரவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார், 40; இவர், ஊராட்சி ஒன்றிய தணிக்கை பிரிவு அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, மேலுார் தனியார் பொறியியல் கல்லுாரியில் ஓட்டுப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணியில் குமார் ஈடுபட்டிருந்தார்.அவரது மனைவி ராதா, மகள் ஹன்சிகா ஆகியோர் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 4:00 மணியளவில் ராதா எழுந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 சவரன் நகைகள், 550 கிராம் வெள்ளிக் கொலுசு, 12 ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X