வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் முகாம்

Added : அக் 11, 2021
Share
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. விக்கிரவாண்டி வட்டார அரசு மருத்துவமனை சார்பில் ஒன்றியத்தில் உள்ள ஆசூர், பொன்னங்குப்பம், விக்கிரவாண்டி பேரூராட்சி பெரிய காலனி பகுதிகளில் முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமை தாங்கினார். சுகாதார

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.

விக்கிரவாண்டி வட்டார அரசு மருத்துவமனை சார்பில் ஒன்றியத்தில் உள்ள ஆசூர், பொன்னங்குப்பம், விக்கிரவாண்டி பேரூராட்சி பெரிய காலனி பகுதிகளில் முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், செவிலியர்கள் குழுவினர் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் என கணக்கெடுத்து, தடுப்பூசி செலுத்தினர்.சுகாதார ஆய்வாளர் பிருத்திவிராஜ், ஆசூர் ஊராட்சி செயலாளர் பாலு, வி.ஏ.ஓ., முருகன் மற்றும் நோய் தடுப்பு பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X