சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கொள்கைகளை எப்போதோ புதைச்சாச்சு!'

Updated : அக் 12, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம், நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'எந்தவொரு கொள்கை பிடிப்பும் இல்லாதது, 'நாம் தமிழர்' என்ற கட்சி. அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து காங்., கட்சியினரை பொது மேடையில் கொச்சையாக பேசி வருகிறார். அது கண்டிக்கத்தக்கது' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அவங்களுக்கு தான் எந்த
பக்க வாத்தியம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம், நிருபர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், 'எந்தவொரு கொள்கை பிடிப்பும் இல்லாதது, 'நாம் தமிழர்' என்ற கட்சி. அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து காங்., கட்சியினரை பொது மேடையில் கொச்சையாக பேசி வருகிறார். அது கண்டிக்கத்தக்கது' என்றார்.

அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அவங்களுக்கு தான் எந்த கொள்கை பிடிப்பும் இல்லை... சரி, பாரம்பரியமிக்க காங்கிரசுக்கு கொள்கை இருக்கிறது அல்லவா அதை சரியா கடைப்பிடிக்கிறாங்களா...' என்றார்.

அருகிலிருந்தவர், 'கொள்கையை எல்லாம் குழி தோண்டி புதைச்சு, ரொம்ப நாளாச்சு...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதிக்கும் வகையில் சிரித்தனர்.


'இதுவே அ.தி.மு.க., ஆட்சியா இருந்தால்...'


திருவண்ணாமலை - திருச்சி இரு வழிச்சாலை அமைக்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்வது குறித்து, திருவண்ணாமலை அடுத்த கண்ணமடை வனப் பகுதியில், நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார்.

அதன் பின் அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'சாலை விரிவாக்கத்தின் போது, மரம் வெட்டுவது தவிர்க்க முடியாத ஒன்று. ஒரு மரம் வெட்டினால், 10 மரங்கள் நடுவதே நெடுஞ்சாலை துறையின் நோக்கம். சாலையின் விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்படுகின்றன' என்றார்.

அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'இதுவே அ.தி.மு.க., ஆட்சியா இருந்தால், 'மரங்களை வெட்டி சுற்றுசூழலை அழிக்கிறாங்க...' என, தி.மு.க., ஆதரவு அமைப்புகள் போராட்டம் நடத்தியிருக்கும்... 'டிவி' நிகழ்ச்சியில நாலு பேர் சத்தம் போட்டு பேசியிருப்பாங்க... இப்போ அதை எல்லாம் காணோமே...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.


'ஆட்சி அதிகாரமே இருக்கு!'



அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு சென்று பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கும், தி.மு.க., அரசை கண்டித்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் அருகே, பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில், 'நாங்கள் போற்றி வணங்கும் மீனாட்சியே... உனக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் வந்து வழிபட, தி.மு.க., அரசு அனுமதி மறுக்கிறது... அதை எதிர்த்து போராடும் வலிமையை தா... உணர்வை தா... தி.மு.க., அரசை எதிர்க்கும் துணிச்சலை தா என வேண்டுகிறேன்' என ஆவேசமாக பேசினார்.

இதை கேட்டுக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், 'மத்தியில் ஆளும் ஆட்சி அதிகாரத்தையே பா.ஜ.,வுக்கு கொடுத்திருக்கிறோம்... அதை பயன்படுத்த தெரியாமல், 'வலிமை தா, அண்ணாத்த தா' என, 'காமெடி' பண்ணுறாரு...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
11-அக்-202118:42:17 IST Report Abuse
D.Ambujavalli எட்டு வழியோ, ரெண்டு வழியோ, மரங்களை வெட்டி, மாநிலத்தை மொட்டையடிப்பதில் 'ஆண்டவருக்கும், ஆள்பவருக்கும்' மஹா ஒற்றுமைதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X