முதியோரை தேடி வீட்டுக்கே வந்த தடுப்பூசி! கலெக்டர், கமிஷனர் ஆய்வு

Added : அக் 11, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
கோவை:'மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை அடையாளம் கண்டு வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது' என்று கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில் ஐந்தாம் முறையாக மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நடந்த முகாமை கலெக்டர் சமீரன் பார்வையிட்டார்.அவர் கூறியதாவது:செப்.,12ல் நடந்த முதல் மெகா தடுப்பூசி முகாமில் 1,51,685

கோவை:'மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை அடையாளம் கண்டு வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது' என்று கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில் ஐந்தாம் முறையாக மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நடந்த முகாமை கலெக்டர் சமீரன் பார்வையிட்டார்.
அவர் கூறியதாவது:செப்.,12ல் நடந்த முதல் மெகா தடுப்பூசி முகாமில் 1,51,685 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. செப்.,19ல் நடந்த முகாமில் 94,723 பேருக்கும், செப்.,26ல் 1,13,618 பேருக்கும், அக்.,3ல் நடந்த முகாமில் 81,454 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. நான்கு முகாம்கள் மூலம் 4,41,480 பேர் பயன் பெற்றனர்.ஐந்தாவது முகாம் நேற்று நடந்தது. 1429 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டன. பஸ்ஸ்டாண்ட்களில் நடமாடும் முகாம்கள் செயல்படுத்தப்பட்டன. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து, காந்திபுரம் புறநகர் பஸ்ஸ்டாண்டில் செயல்பட்ட நடமாடும் தடுப்பூசி முகாமையும், காந்திபுரம் 9வது குறுக்கு சாலை சாலை மேபிளவர் அபார்ட்மென்ட் வளாகத்தில் வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்துவதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.மாவட்டத்தில் மொத்தம் 1,09582 பேருக்கு, நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.மாநகராட்சி கமிஷனர் ஆய்வுவீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை, மாநகராட்சி கமிஷனர் நேற்று பார்வையிட்டார். ராமநாதபுரம், 80 அடி ரோடு, பெருமாள் கோவில் வீதியில், இலைக்கடை வியாபாரிகள், வீட்டில் படுக்கையில் இருந்த பெண்மணி உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதை பார்வையிட்டதுடன், தடுப்பூசி தவறாது செலுத்திக்கொள்ளவும், பொது மக்களை கமிஷனர் அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-அக்-202106:46:59 IST Report Abuse
Ram Pollachi இரண்டு தடுப்பூசி போட்டால் ஒன்று போனஸ் என சொல்லுங்கள் ஜனங்கள் உங்களை தட்டி எழுப்பி விடுவர் பரவாயில்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X