கோவை:கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, மண் கடினத்தன்மை பரிசோதனை நடந்து வருகிறது.கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு ரூ.6683 கோடி நிதி ஒதுக்கி இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.கணியூர் - உக்கடம் 26 கி.மீ., பிளிச்சி - உக்கடம் 24 கி.மீ., காரணம்பேட்டை -தண்ணீர் பந்தல் 42 கி.மீ., கணேசபுரம் -காருண்யா நகர் 44 கி.மீ., உக்கடம் வெள்ளலுார் -பஸ்ஸ்டாண்ட் 8 கி.மீ., என ஐந்து வழித்தடங்களில் 144 கிலோமீட்டருக்கு, மெட்ரோ ரயில் இயக்கும் திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ளது.விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்காக, நிலவியல் ஆய்வு, மண் கடினத்தன்மை ஆய்வுகளை ஒப்பந்ததாரர் மூலம் இந்திய ரயில்வேயின் 'ரைட்ஸ்' நிறுவனம் மேற்கொண்டுள்ளது.மெட்ரோ திட்ட உத்தேச வழித்தடத்தில் 296 இடங்களில் துளையிட்டு மண், பாறைகளின் கடினத்தன்மையை அறியும் பணி தொடங்கியுள்ளது.கோவை சிங்காநல்லுார் குளத்தேரியில் நேற்று துளையிடும் பணி நடந்தது. அதிகபட்சம் 30 அடி ஆழம் துளையிடுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE