பொது செய்தி

தமிழ்நாடு

வருவது எந்த பஸ்; குழப்பமோ குழப்பம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
'அஞ்சாம் நெம்பர் பஸ் போயிடுச்சா? கிழக்க போற பஸ் எப்ப வரும்?' என, பஸ் எண், பெயர், மற்றும் நிறங்களை அடையாளமாகக் கொண்டே கிராம மக்கள் பலர் பஸ் ஏறுவதை இன்றும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.நிலைமை இவ்வாறு இருக்க, திருப்பூர் -- பொங்கலுார் வழித்தடத்தில், மாற்றுப் பேருந்து என்ற பெயரில், தினம் ஒரு பஸ் வருவது, கிராம மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.இது குறித்து கிராம மக்கள்

'அஞ்சாம் நெம்பர் பஸ் போயிடுச்சா? கிழக்க போற பஸ் எப்ப வரும்?' என, பஸ் எண், பெயர், மற்றும் நிறங்களை அடையாளமாகக் கொண்டே கிராம மக்கள் பலர் பஸ் ஏறுவதை இன்றும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.நிலைமை இவ்வாறு இருக்க, திருப்பூர் -- பொங்கலுார் வழித்தடத்தில், மாற்றுப் பேருந்து என்ற பெயரில், தினம் ஒரு பஸ் வருவது, கிராம மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:திருப்பூரில் இருந்து வீரபாண்டி பிரிவு, நொச்சிபாளையம், அவரப்பாளையம், அல்லாளபுரம், உகாயனுார் வழியாக பொங்கலுார் செல்லும் அரசு பஸ் எண் 28,சமீப நாட்களாக வருவதில்லை. அதற்கு பதில், பல்வேறு எண், பெயர், நிறத்துடன் தினசரி ஒரு பஸ் வருகிறது.இதனால், வருவது வழக்கமான பஸ்தானா அல்லது வேறு பஸ்சா என்ற குழப்பம் குறித்து கேட்டறிந்து ஏறுவதற்குள் பஸ் கிளம்பி விடுகிறது. ஊரடங்குக்கு பின், வழக்கமாக வரும் பஸ் வராமல், மாற்று பேருந்துகளே இயங்கி வருகின்றன. எனவே, திருப்பூர் -- பொங்கலுார் வழித்தடத்தில் இயங்கி வந்த பஸ்சை வழக்கம்போல் இயக்க, போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X