பொது செய்தி

தமிழ்நாடு

ரொக்கம் இல்லா பரிவர்த்தனை: விவசாயிகள் தயக்கம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
அவிநாசி:சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை, நிலக்கடலை ஏலம் நடத்தப்படுகிறது.வர்த்தகத்துக்கு உரிய பணத்தை, வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், வங்கி மூலமே பரிமாற்றம் செய்ய வேண்டும் என, விற்பனைக்கூட சங்க நிர்வாகிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.'அவரவர் வங்கிக்கணக்கை, விற்பனைக்கூட நிர்வாகிகளிடம் வழங்க வேண்டும்' என, ஒலிபெருக்கி மூலமும்,

அவிநாசி:சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை, நிலக்கடலை ஏலம் நடத்தப்படுகிறது.வர்த்தகத்துக்கு உரிய பணத்தை, வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், வங்கி மூலமே பரிமாற்றம் செய்ய வேண்டும் என, விற்பனைக்கூட சங்க நிர்வாகிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.'அவரவர் வங்கிக்கணக்கை, விற்பனைக்கூட நிர்வாகிகளிடம் வழங்க வேண்டும்' என, ஒலிபெருக்கி மூலமும், நேரிலும், விவசாயிகள் மத்தியில், நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.விவசாயிகள் பலரிடம் வங்கி பரிவர்த்தனை தொடர்பான விழிப்புணர்வு இல்லை. 'வங்கியில், நகைக்கடன் உள்ளிட்ட சில கடன்களை வாங்கியுள்ளோம். நிலக்கடலை வர்த்தகம் மூலம் அந்த கடன் தொகைக்கு பிடித்தம் செய்து விடுவர்' என்ற அச்சம் பலரிடம் உள்ளது.''சிறியளவில் நிலக்கடலை சாகுபடி செய்வதால், உடனுக்குடன் பணம் தேவைப்படுகிறது. சேவூர் பகுதியில், இரண்டு ஏ.டி.எம்., மையங்களே உள்ளன. சுற்றுவட்டார கிராமப்புறங்களில் ஏ.டி.எம்., மையங்கள் இல்லாததால், அவசர தேவைக்கு ஏ.டி.எம்., மையங்களுக்கு சென்று பணம் எடுப்பதில் சிரமம் உள்ளது'' என்கின்றனர் விவசாயிகள்.விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் கூறுகையில், "இந்த நிலக்கடலை சீசனில், இதுவரை, 68க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, 22 லட்சம் ரூபாய்க்கும் மேல் வங்கி பணிபரிவர்த்தனை மூலம் தொகை வழங்கியுள்ளோம். வங்கி பண பரிவர்த்தனையின் பலன் குறித்து, விவசாயிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்." என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X