பொது செய்தி

தமிழ்நாடு

பாழடைந்த ஆசிரியை குடியிருப்பு

Added : அக் 11, 2021
Share
Advertisement
கடந்த, 40 ஆண்டுக்கு முன், அரசு பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஆசிரியைகளுக்கென, பள்ளி வளாகத்திலேயே, அரசின் சார்பில் குடியிருப்பு கட்டிக்கொடுக்கப்பட்டன.ஆசிரியைகள், அங்கு தங்கி கல்வி பயிற்றுவித்து வந்தனர். சில இடங்களில் அங்கு ஆசிரியைகள் தங்க முன்வராததால், பள்ளி சமையலர், இரவு காவலர் போன்றோர் தங்கியிருந்தனர்.அவிநாசி ஊராட்சி ஒன்றியம், கருவலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி

கடந்த, 40 ஆண்டுக்கு முன், அரசு பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஆசிரியைகளுக்கென, பள்ளி வளாகத்திலேயே, அரசின் சார்பில் குடியிருப்பு கட்டிக்கொடுக்கப்பட்டன.ஆசிரியைகள், அங்கு தங்கி கல்வி பயிற்றுவித்து வந்தனர். சில இடங்களில் அங்கு ஆசிரியைகள் தங்க முன்வராததால், பள்ளி சமையலர், இரவு காவலர் போன்றோர் தங்கியிருந்தனர்.அவிநாசி ஊராட்சி ஒன்றியம், கருவலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடத்தில், கடந்த, 1981, மே 27ல், அப்போதைய கலெக்டர் மலைச்சாமி தலைமையில், அப்போதைய கவர்னர் சாதிக் அலி திறந்து வைத்தார். அப்போதைய தொகுதி எம்.பி., பிரபு, எம்.எல்.ஏ. ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நாளடைவில், அக்கட்டடம்பயனற்று, தற்போது பாழடைந்து கிடக்கிறது. சமூக விரோத செயல்களும் நடக்கிறது. கட்டடத்தை பராமரித்து, அரசு சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தலாம்' என, அப்பகுதி மக்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X