பொது செய்தி

தமிழ்நாடு

மரணத்தை தழுவும் தேசிய பறவைகள்! பூச்சிக்கொல்லி காரணம்?

Added : அக் 11, 2021
Share
Advertisement
பல்லடம்;பல்லடம் அருகே, 10 மயில்கள், விஷம் காரணமாக பலியானது தெரியவந்தது. கடந்த நான்கு மாதங்களில், 53 மயில்கள் பலியாகியுள்ளன. 'மயில்கள் பலியானதற்கு, பூச்சிக்கொல்லி மருந்துகள் காரணமாக இருக்கலாம்'' என்று வன அதிகாரி கூறினார்.பல்லடம் அடுத்த, வடுகபாளையம் புதுார் வேலங்காட்டுத் தோட்டத்தில், 4 பெண் மற்றும் 6 ஆண் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அப்பகுதியை சேர்ந்த

பல்லடம்;பல்லடம் அருகே, 10 மயில்கள், விஷம் காரணமாக பலியானது தெரியவந்தது. கடந்த நான்கு மாதங்களில், 53 மயில்கள் பலியாகியுள்ளன. 'மயில்கள் பலியானதற்கு, பூச்சிக்கொல்லி மருந்துகள் காரணமாக இருக்கலாம்'' என்று வன அதிகாரி கூறினார்.பல்லடம் அடுத்த, வடுகபாளையம் புதுார் வேலங்காட்டுத் தோட்டத்தில், 4 பெண் மற்றும் 6 ஆண் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அப்பகுதியை சேர்ந்த சிலர், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இறந்த மயில்களின் உடற்கூறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இறந்த மயில்கள் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டன.கால்நடை மருத்துவர் கூறுகையில், 'இறந்த மயில்களுக்கு, ஒன்றரை முதல் இரண்டு வயது இருக்கும். இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்தான் மயில்களுக்கு விஷத்தை உண்டுள்ளன. விஷம் அருந்திய மயில்கள், இங்கு வந்து இறந்துள்ளது ஆய்வில் தெரிந்துள்ளது. ஆய்வறிக்கை வனத்துறைக்கு வழங்கப்படும். வனத்துறை அதிகாரிகள் இது தொடர்பான விசாரணை மேற்கொள்வர் என்றார்.4 மாதத்தில்53 மயில்கள் பலிமாவட்டம் முழுவதும், ஆயிரக்கணக்கான மயில்கள் பரவலாக வசித்து வருகின்றன. தேசிய பறவையான இவை, சமீப காலமாக விஷம் வைத்து கொல்லப்படுவது அதிகரித்துள்ளது. கடந்த, 4 மாதத்தில் மட்டும், 53 மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன.இருந்தும், இவற்றை காப்பதற்கான எந்த நடவடிக்கையையும் வனத்துறை இதுவரை மேற்கொள்ளவில்லை. வன அலுவலர் திருநாவுக்கரசிடம் கேட்டதற்கு, 'கடந்த காலங்களில் மயில்கள் இறந்த சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருகின்றன. பயிர்களை பாதுகாக்க, விவசாயிகள் வைக்கும் பூச்சி கொல்லி மருந்துகளால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரித்து, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் பயன்பாட்டுக்கு விட வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X