வண்ணக்கலவை ஆகும் ஓடை நீர்! சாயக் கழிவால் சங்கடம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார், சின்னக்கரை, அருள்புரம், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. பல்லடம் அருகே அவரப்பாளையம் ஓடையில், முறைகேடாக சாயக்கழிவு நீர் வெளியேற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விவசாயிகள்கூறுகையில், 'பெரும்பாலும், நீர் வழித்தட ஓடைகள் அனைத்தும் நீண்ட காலமாக துார்வாரப்படாமல் புதர்கள் மண்டியே கிடக்கின்றன.

பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார், சின்னக்கரை, அருள்புரம், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. பல்லடம் அருகே அவரப்பாளையம் ஓடையில், முறைகேடாக சாயக்கழிவு நீர் வெளியேற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விவசாயிகள்கூறுகையில், 'பெரும்பாலும், நீர் வழித்தட ஓடைகள் அனைத்தும் நீண்ட காலமாக துார்வாரப்படாமல் புதர்கள் மண்டியே கிடக்கின்றன. ஆள் அரவமற்ற புதர்கள் நிறைந்த பகுதிகளை சாதமாக்கிகொள்ளும் சில ஆலைகள், முறை கேடாக சாயக்கழிவு நீரை வெளியேற்றுகின்றன.குறிப்பாக, மழைக்காலங்களில் இந்த முறைகேடு அதிக அளவில் நடக்கிறது. மழை நீருடன் சாயக்கழிவுநீர் கலப்பதால், கண்டுபிடிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.விளைவிக்கப்படும் பயிர்களும் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. உரிய ஆய்வு மேற்கொண்டு, விதிமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X