தள்ளாடிய 'குடி'மகன்; தடுமாறிய வாகனங்கள்

Added : அக் 11, 2021
Share
Advertisement
பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக, ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. திருப்பூர் ரோடு சந்திப்பு, நால் ரோடு சிக்னல், பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை, மாணிக்காபுரம் ரோடு, மற்றும் செட்டிபாளையம் பிரிவு உள்ளிட்ட இடங்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்தவை. சிறிய இடையூறு ஏற்பட்டாலும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து விடும். சாதாரணமாகவே ரோட்டை கடக்க வாகன

பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக, ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. திருப்பூர் ரோடு சந்திப்பு, நால் ரோடு சிக்னல், பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை, மாணிக்காபுரம் ரோடு, மற்றும் செட்டிபாளையம் பிரிவு உள்ளிட்ட இடங்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்தவை. சிறிய இடையூறு ஏற்பட்டாலும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து விடும். சாதாரணமாகவே ரோட்டை கடக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இச்சூழலில், 'குடி'மகன் ஒருவர் தள்ளாடியபடி ரோட்டை கடந்தது, வாகன ஓட்டிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.நால் ரோடு சிக்னலில் தள்ளாடி வந்த 'குடி'மகன் ஒருவர், முதலில், பொள்ளாச்சி ரோடு பிரிவில் இருந்த டிவைடர் மீது அமர்ந்தார். பின், வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது, ரோட்டை கடக்க முயன்று எதிரே இருந்த டிவைடரில்மீண்டும் அமர்ந்தார்.வாகன ஓட்டிகள் கூறுகையில், 'அதிகப்படியான போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலையில், டாஸ்மாக் மதுக்கடை, பார்'கள் அமைந்துள்ளன. இதனால், 'குடி'மகன்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. விபத்து அதிகரிக்க இதுவும் ஒரு காரணம். மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்றினால் மட்டுமே தீர்வு' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X