பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி விலை 4 மடங்கு உயர்வு

Added : அக் 11, 2021
Share
Advertisement
பொங்கலுார்:தக்காளி விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி, அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. ஓராண்டுக்கும் மேலாக தக்காளிக்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்தித்தனர். நஷ்டத்தை தவிர்க்க தக்காளி சாகுபடி செய்யும் பரப்பை விவசாயிகள் குறைத்தனர்.புரட்டாசியில் பெய்த தொடர் மழை காரணமாக

பொங்கலுார்:தக்காளி விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி, அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. ஓராண்டுக்கும் மேலாக தக்காளிக்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்தித்தனர். நஷ்டத்தை தவிர்க்க தக்காளி சாகுபடி செய்யும் பரப்பை விவசாயிகள் குறைத்தனர்.புரட்டாசியில் பெய்த தொடர் மழை காரணமாக செடிகளில் தக்காளி அழுகி வருகிறது. இதனால், உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. வெளியூர் வரத்தும் குறைந்து உள்ளது. பல விவசாயிகள் தக்காளி சாகுபடி பரப்பை குறைத்து, புரட்டாசி பட்டத்தில் கால்நடை தீவன பயிர்கள் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டினர். இரு வாரங்கள் முன்பு வரை, 14 கிலோ கொண்ட ஒரு டிப்பர் தக்காளி,120 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தில் அது, 250 ரூபாயாக உயர்ந்தது. தற்போது ஒரு டிப்பர் 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. விலை உயர்ந்த போதிலும் விளைச்சல் சரிந்ததால் தக்காளி விவசாயிகளுக்கு பெரிய அளவில் பயன் அளிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X