மின் உற்பத்தி நிலையம் மூடல்: இருளில் மூழ்கியது லெபனான்

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
பெய்ரூட்,-லெபனானில் எரிபொருள் தட்டுப்பாடால், இரண்டு பிரதான மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஒட்டுமொத்த நாடே இருளில் மூழ்கி உள்ளது.மேற்காசிய நாடான லெபனான் பல ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. கடும் வீழ்ச்சிஅமெரிக்க டாலருக்கு நிகரான லெபனானின் நாணய மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் எரிபொருள்

பெய்ரூட்,-லெபனானில் எரிபொருள் தட்டுப்பாடால், இரண்டு பிரதான மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஒட்டுமொத்த நாடே இருளில் மூழ்கி உள்ளது.



latest tamil news


மேற்காசிய நாடான லெபனான் பல ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. கடும் வீழ்ச்சிஅமெரிக்க டாலருக்கு நிகரான லெபனானின் நாணய மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் எரிபொருள் ஏற்றுமதியை நம்பி இருக்கும் லெபனான் மின் வாரியம், தற்போது பெரும் சவாலை சந்தித்து வருகிறது. இந்த மின் வாரியம் 11 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஆண்டுதோறும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது

.இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடால் நாட்டில் இயங்கும் இரண்டு பிரதான மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் 270 மெகாவாட் மின்சாரத்திற்கும் குறைவாகவே மொத்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த நாடே இருளில் மூழ்கி உள்ளது.மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழங்கும் இடங்களில் மின்சாரம் இல்லாததால், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

லெபனானில் இதுவரை தினமும் மூன்று முதல் ஆறு மணி நேரம் வரை மட்டுமே மின் தடை இருந்து வந்தது. இந்நிலையில் இந்த மின் உற்பத்தி நிறுத்தத்தால், இனி ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நெருக்கடிஇந்த நெருக்கடியை சமாளிக்க, ஈரானில் இருந்து எரிபொருளை லெபனான் அரசு இறக்குமதி செய்துள்ளது.


latest tamil news


ஈராக், ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட நாடுகளிடமும் உதவி கோரப்பட்டுள்ளது.இதற்கிடையே, மானியம் நிறுத்தப்பட்டுள்ளதால், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வினியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.கடந்த மார்ச்சிலும் இதுபோல் லெபனானில் மின் தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
11-அக்-202122:24:09 IST Report Abuse
Vittalanand கூடங்குளம் ஏன் தேவை என்று அறியவும். ... ஓட்டுக்காக கூடங்குளம், ஸ்டெர்லைட் ஆலையும் மூடியதால் யாருக்கு நஷ்டம் .?...தவிர்த்து கம்மோக்களும் உணர வேண்டும் வருங்காலதில் அனு மின்சாரம் ஒன்றே தீர்வு. செநதில் பாலாஜி உராணியம் இருப்பு சோதிக்க முடியாது.
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
11-அக்-202116:20:47 IST Report Abuse
Srivilliputtur S Ramesh லெபனான் இஸ்லாமிய தீவிரவாதத்தின் தாயகமாக இருந்தது. இருக்கிறது. இதுவே அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாகும். அந்த நாட்டை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது. .. இஸ்லாமிய பயங்கரவாதம் என்ன செய்யும் என்பதற்கு லெபனான் ஒரு படிப்பினை....
Rate this:
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
11-அக்-202111:09:52 IST Report Abuse
R KUMAR இதைப்போன்று நிகழ்வதற்குக் காரணம் மோடிமற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் தான். லெபனான் நாட்டிற்கு கொஞ்சம் மின்சாரத்தினை கட்டி கொரியர் மூலம் அனுப்பினால் என்ன? குறைந்தாபோய்விடும். ஹாய் சும்மா முதல்வர் என்ன கூறுவார் என்று கனவு கண்டேன், அதன் பலன்தான் இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X