பி.எம்.எஸ்., மாநில செயற்குழு கூடியது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பி.எம்.எஸ்., மாநில செயற்குழு கூடியது

Added : அக் 11, 2021
Share
திருப்பூர்:பாரதிய மஸ்துார் சங்க மாநில செயற்குழு கூட்டம், திருப்பூர்ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:விருதுநகரில், பாரதிய உடலுழைப்பு சங்க மாவட்ட செயலாளர் பால்பாண்டியனை, கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் விரைந்து கண்டுபிடித்து, தண்டனை பெற்று தர

திருப்பூர்:பாரதிய மஸ்துார் சங்க மாநில செயற்குழு கூட்டம், திருப்பூர்ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:விருதுநகரில், பாரதிய உடலுழைப்பு சங்க மாவட்ட செயலாளர் பால்பாண்டியனை, கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் விரைந்து கண்டுபிடித்து, தண்டனை பெற்று தர வேண்டும்.செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த துளசிதாஸை, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, போலீசார் கைது செய்யவேண்டும். இத்தகைய கொடூர செயல்கள் கண்டனத்துக்குரியது.அகில இந்திய பாரதிய மஸ்துார் சங்க தலைவர் ஹிரண்மய பாண்டியா, வரும் 24 முதல் 28ம் தேதி வரை, தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். ஏராளமான இளைஞர்களை இணைத்து, சங்க தலைவருடன் சந்திப்பு நடத்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொதுச்செயலாளர் விமேஸ்வரன், அமைப்பு செயலாளர் தங்கராசு உட்பட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X