பொது செய்தி

தமிழ்நாடு

5வது முகாமில் ஆர்வம் குறைவு: 5வது முகாமில் ஆர்வம் குறைவு

Added : அக் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாமில், 78,396 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் நான்கு கட்டமாக நடந்த மெகா தடுப்பூசி முகாம் சேர்த்து, நேற்று முன்தினம் வரை, 19 லட்சத்து, 74 ஆயிரத்து, 916 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.நேற்று, 660 நிரந்த மையம், 82 நடமாடும் வாகனங்களில் என, 742 பகுதியில் ஐந்தாம் கட்ட தடுப்பூசி

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாமில், 78,396 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் நான்கு கட்டமாக நடந்த மெகா தடுப்பூசி முகாம் சேர்த்து, நேற்று முன்தினம் வரை, 19 லட்சத்து, 74 ஆயிரத்து, 916 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.நேற்று, 660 நிரந்த மையம், 82 நடமாடும் வாகனங்களில் என, 742 பகுதியில் ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம் நடந்தது. மாநகராட்சி, மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் என, 2,968 பேர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.நடப்பு வாரம் ஆயுதபூஜை விடுமுறை என்பதால், நேற்று பெரும்பாலான பனியன் நிறுவனங்கள் செயல்பட்டன. முகாம் காலை, 7:00 மணிக்கு துவங்கியது; முதல் ஒரு மணி நேரம் அதாவது, காலை, 8:00 மணி வரை, 1,260 பேர் மட்டும் தடுப்பூசி செலுத்தியிருந்தனர்.பலரும் நிறுவனங்களுக்கு வேலை சென்று விட்டதால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவதில்லை.இருப்பினும், காலை, 10:00 மணிக்கு பின் மெல்ல கூட்டம் அதிகரித்தது. 11:00 மணிக்கு, 19 ஆயிரத்து, 632 பேரும், மதியம், 1:00 மணிக்கு, 47 ஆயிரத்து, 240 பேருக்குக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.முகாம் துவக்கத்தில் யாரும் வரவில்லையென்றாலும், மதியம் வரை ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர்.ஆனால், மாலையில் கூட்டம் குறைந்தது. 5:00 மணி நிலவரப்படி, 72 ஆயிரத்து, 66 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ரயில்வே ஸ்டேஷன், புதிய, பழைய பஸ் ஸ்டாண்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வழக்கமான ஆர்வமில்லை; சுணக்கம் காணப்பட்டது. கடந்த வாரங்களில், மதியம், 1:00 மணிக்கு முகாம் நிறைவு பெற்ற பகுதியில் நேற்று மாலை வரை முகாம் நடந்தது.நேற்று, ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 640 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரவு, 7:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில், 78,396 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.கலெக்டர் ஆய்வுவீரபாண்டி, கணபதிபாளையம், அறிவொளி நகர் பகுதியில் நடந்த தடுப்பூசி முகாமுக்கு, நேற்று காலை, 10:30 மணிக்கு சென்ற கலெக்டர் வினீத்,' இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளீர்கள். மக்கள் ஆர்வமாக வருகிறார்களா, முதியோர் தடுப்பூசி போட வருகின்றனரா,' என கேட்டறிந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X