பொது செய்தி

தமிழ்நாடு

வட மாநில தொழிலாளருக்காக சட்ட விழிப்புணர்வு முகாம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வெள்ளி விழா ஆண்டையொட்டி, திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் பழைய சார்பு நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது.இதில், வடமாநிலத் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இலவச சட்ட உதவி மைய வக்கீல்கள், மகளிர்

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வெள்ளி விழா ஆண்டையொட்டி, திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் பழைய சார்பு நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது.இதில், வடமாநிலத் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இலவச சட்ட உதவி மைய வக்கீல்கள், மகளிர் இன்ஸ்பெக்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஜே.எம். 3 மாஜிஸ்திரேட் உதயசூரியா, ''வடமாநில தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; அதை சரியான முறையில் கண்காணிக்க வேண்டியது சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கடமை'' என்றார்.முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாரதி பிரபா, ''விழிப்புணர்வு முகாம் மூலம், பல்வேறு தரப்பட்ட மக்கள், தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இம்முகாமில் வடமாநில தொழிலாளர் பிரச்னைகளை நேரடியாக கேட்டறிவதற்கு, ஹிந்தி தெரிந்த, இலவச சட்ட உதவி மைய வக்கீல் இருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதை உரிய முறையில் பயன்படுத்தி, பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்'' என்றார்.மேலும், விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. வடமாநில தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கான, 40 மனுக்கள் பெறப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X