மாணவர் கலைத்திறன் வெளிப்படுத்த நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் கலைத்திறன் வெளிப்படுத்த நிகழ்ச்சி

Added : அக் 11, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், கிளாசிக்ஸ் கார்ட்ஸ், மங்கைபாரதி தகவல்வெளியீட்டு மையம் ஆகியவை இணைந்து மாணவ, மாணவியர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் நிகழ்வு நேற்று நடந்தது.தலைவர் பவளக்குன்றன் தலைமை வகித்தார். செல்வக்குமார் தொகுத்து வழங்கினார். மங்கை பாரதி தகவல் வெளியீட்டு மையம் கந்தசாமி, பொருளாளர் ஜீவானந்தம் பரிசுகளை

திருப்பூர்:திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், கிளாசிக்ஸ் கார்ட்ஸ், மங்கைபாரதி தகவல்வெளியீட்டு மையம் ஆகியவை இணைந்து மாணவ, மாணவியர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் நிகழ்வு நேற்று நடந்தது.தலைவர் பவளக்குன்றன் தலைமை வகித்தார். செல்வக்குமார் தொகுத்து வழங்கினார். மங்கை பாரதி தகவல் வெளியீட்டு மையம் கந்தசாமி, பொருளாளர் ஜீவானந்தம் பரிசுகளை வழங்கினார்.திருமுறை பாடல்கள் பாடுதல், திருக்குறள் ஒப்புவித்தல், பொது அறிவு கேள்வி, பதில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் ஒப்புவித்தல், பாரதியார் பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X