பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை விரியும்... இயற்கை இனிக்கும்!

Added : அக் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 500 மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.திருப்பூர் மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க செய்யும் விதமாகவும், பசுமையான சுற்றுச் சூழலை மேம்படுத்தவும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் துவங்கி, ஏழு ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுகிறது. தற்போது, இத்திட்டத்தின், ஏழாவது கட்டம் துவங்கி பல்வேறு பகுதிகளில் மரக்கன்று
 பசுமை விரியும்... இயற்கை இனிக்கும்!

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 500 மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.திருப்பூர் மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க செய்யும் விதமாகவும், பசுமையான சுற்றுச் சூழலை மேம்படுத்தவும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் துவங்கி, ஏழு ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுகிறது. தற்போது, இத்திட்டத்தின், ஏழாவது கட்டம் துவங்கி பல்வேறு பகுதிகளில் மரக்கன்று நடப்பட்டு வருகிறது.அதன்படி, திருப்பூர் அடுத்த வெள்ளகோவில், மூலனுார் ரோடு பள்ளக்காட்டு தோட்டத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு நேற்று நடந்தது.இதில், வெள்ளகோவில் நிழல்கள் அமைப்பு சார்பாக, வேம்பு, நாவல், இலுப்பை, பூங்கன், ஆயன், நீர்மருது, பூவரசு, சிசு, இலவம்பஞ்சு, சந்தனம் என, மொத்தம், 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.இவ்விரு நிகழ்ச்சியில் தோட்ட உரிமையாளர்கள் நாகசுந்தரம், சாந்தி, மிதுன் சூர்யகுமார் மற்றும் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக் குழுவினர் பங்கேற்றனர். இத்திட்டத்தின் கீழ், தங்கள் நிலத்தில் மரக்கன்று நட விருப்பமுள்ளோர், கள அலுவலரை 90474-86666 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X