எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

வாரியத்துக்கு ரூ.பல கோடி இழப்பு ஏற்படுத்தும் ஏலம்: இணைய விளம்பரத்தால் அம்பலம்!

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
கோவையில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான, வணிக இடங்களை ஏலம் விட்டதில், பல கோடி ரூபாய் வாரியத்துக்கு இழப்பு ஏற்படுவது, இணைய விளம்பரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பல்வேறு வீட்டு வசதித் திட்டங்களில், வணிகப் பயன்பாட்டுக்கு ஒதுக்கிய

கோவையில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான, வணிக இடங்களை ஏலம் விட்டதில், பல கோடி ரூபாய் வாரியத்துக்கு இழப்பு ஏற்படுவது, இணைய விளம்பரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.latest tamil newsதமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பல்வேறு வீட்டு வசதித் திட்டங்களில், வணிகப் பயன்பாட்டுக்கு ஒதுக்கிய இடங்கள் விற்கப்படவில்லை. அவற்றின் மதிப்பு, இப்போது பல மடங்கு அதிகமாகியுள்ள நிலையில், இந்த இடங்களை விற்று, வாரியத்துக்கு நிதி சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

கோவையில் கணபதி, காளப்பட்டி, சிங்காநல்லுார், வெள்ளக்கிணர், வீரகேரளம் மற்றும் குறிச்சி ஆகிய பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், உடுமலை அண்ணா குடியிருப்பு, முதலிபாளையம் ஆகிய பகுதிகளிலும் உள்ள கடை மனை, சமுதாயக்கூடம், ஆரம்பப்பள்ளி மனை என, அனைத்து வணிக மனையிடங்களும், கடந்த 23ம் தேதியன்று, கோவை வாரிய அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டன.மொத்தம், 107 இடங்களுக்கு ஏலம் விட்டதில், மிகக்குறைவான இடங்களுக்கு மட்டுமே டெண்டர் வந்துள்ளது.

அவற்றிலும், 20க்கும் குறைவான இடங்களுக்கு சிங்கிள் டெண்டர்கள் மட்டுமே வந்துள்ளன. மதுரையை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட குடும்பத்திலிருந்தே, இந்த சிங்கிள் டெண்டர்கள் அனைத்தும் வந்துள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது.இந்த இடங்களின் சந்தை மதிப்புக்கு சற்றும் தொடர்பில்லாத வகையில், மிகமிகக்குறைவான மதிப்பே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோன்று, வாரியம் நிர்ணயித்த தொகையையும் விட, குறைவான மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

உதாரணமாக, உடுமலை அண்ணா குடியிருப்புப் பகுதியிலுள்ள ஒரு வணிக மனைக்கு, ஒரு கோடியே 68 லட்ச ரூபாய் என்று வாரியம் மதிப்பு நிர்ணயம் செய்துள்ளது.ஆனால் அந்த இடத்துக்கு, 18 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கோரப்பட்டுள்ளது. அதையும் ஏற்று வாரியத்தின் ஒப்புதலுக்கு, கோவை வீட்டு வசதி வாரிய அலுவலர்கள் அனுப்பியுள்ளனர். இதை வாரியம் ஏற்கும்பட்சத்தில், வாரியத்துக்கு, ஒரு கோடியே 49 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படும். உண்மையில், இதன் சந்தை மதிப்பு இன்னும் அதிகமென்பதால் இழப்பு மேலும் அதிகமாகும்.


குறைவான தொகை

இதேபோன்று, கோவை கணபதி காந்தி மாநகரில், சமுதாயக்கூடத்துக்கு ஒதுக்கப்பட்ட, 88 சென்ட் இடத்துக்கு, 8 கோடியே 89 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் என்று வாரியம் மதிப்பு நிர்ணயித்துள்ளது. அதாவது, ஒரு சென்ட்டுக்கு 10 லட்ச ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அந்த இடம், மிகவும் பிரதானமான இடமாக இருப்பதால், இப்போது ஒரு சென்ட், 16 லட்சத்தில் இருந்து, 18 லட்ச ரூபாய் வரை விலை போகிறது.

ஆனால் வாரியமே மிகக்குறைவான தொகையை நிர்ணயித்துள்ளது. இந்த இடத்துக்கு, வாரியம் நிர்ணயித்த தொகையின் ஒரு பகுதியைச் செலுத்தியுள்ள ஒரு நிறுவனம், கிரயம் செய்வதற்கு முன்பாகவே, அந்த இடத்தைக் குறிப்பிட்டு சென்ட் 20 லட்ச ரூபாய் என்று இணையத்தில் விளம்பரம் செய்துள்ளது. இதனால், 10 லட்ச ரூபாய் குறைவாக வாரியமே மதிப்பிட்டிருப்பது உறுதியாகியுள்ளது.இந்த ஏலத்துக்கு வீட்டு வசதி வாரியத்தின் மதுரை பிரிவு கண்காணிப்புப் பொறியாளர் ஒருவர்தான், பொறுப்பாளராக இருந்து ஏலத்தை முடித்து, வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார்.

இதில் சிங்கிள் டெண்டர்கள் போட்டு, விளம்பரமும் கொடுத்துள்ள நிறுவனங்களும் மதுரையைச் சேர்ந்தவையாக இருப்பதால், இது, அதிகாரிகள் மற்றும் சில தனிநபர்களின் சிண்டிகேட் என்று சந்தேகம் எழுந்துள்ளது.


லட்சங்களில் லாபம்

இதை விட இன்னொரு குளறுபடியும் நடந்துள்ளது. கோவை மாநகராட்சியிலுள்ள வெள்ளக்கிணர் பகுதியில் ஒரு சென்ட் இடம், எட்டு லட்ச ரூபாய் மதிப்பிருக்கும் நிலையில், அங்கு ஒரு சென்ட், 3 லட்ச ரூபாய் என்று மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பெரியநாயக்கன்பாளையத்தில் சந்தை மதிப்பு சென்ட் 2 லட்ச ரூபாய் இருக்குமிடத்துக்கு, வாரியம் 5 லட்ச ரூபாய் என்று மதிப்பு நிர்ணயித்துள்ளது.

ஒட்டு மொத்தமாக, இந்த ஏலத்தால் வாரியத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பும், அதிகாரிகள் உட்பட தனிநபர்கள் சிலருக்கு, லட்சங்களில் லாபமும் கிடைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக, இந்த ஏலத்தை ரத்து செய்து, இடங்களுக்கான மதிப்பை மறு நிர்ணயம் செய்து, மறு ஏலம் விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.


latest tamil newsகோவை வீட்டு வசதி வாரிய கண்காணிப்புப் பொறியாளர் சாந்தியிடம் கேட்டதற்கு, ''இந்த விஷயத்தில் வாரியம் எடுக்கும் முடிவுதான் இறுதியாகும். அந்த ஏலத்துக்கு நான் பொறுப்பு அதிகாரி கிடையாது என்பதால், அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது,'' என்றார். வாரிய இடத்தை தரை ரேட்டுக்கு வாரிக்கொடுக்கும் காரியத்தைத் தடுப்பது அரசின் அவசரக்கடமை!

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jay - toronto,கனடா
11-அக்-202123:53:00 IST Report Abuse
jay கடைசி தேர்தலில் ஓட்டுக்கு எவ்வளவு வாங்கினீங்க
Rate this:
Cancel
jay - toronto,கனடா
11-அக்-202123:52:31 IST Report Abuse
jay ஓட்டுக்கு பணம் வாங்கிய நீதி நியாயம் கேட்டால் சிரிப்பு வருது
Rate this:
Cancel
Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-அக்-202121:39:18 IST Report Abuse
Murugesan அயோக்கியத்தனத்தின் மொத்த உருவங்கள் திராவிட கட்சிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X