போதை சாக்லெட் விற்பனை :உ.பி., வாலிபர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'போதை' சாக்லெட் விற்பனை :உ.பி., வாலிபர்கள் கைது

Added : அக் 11, 2021
Share
அனுப்பர்பாளையம்:நியூ திருப்பூரில் போதை சாக்லெட்களை விற்ற உ.பி., வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.பெருமாநல்லுார் போலீசார் நேற்று மாலை கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, நியூ திருப்பூர் ரவுண்டானா பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம்,
 'போதை' சாக்லெட் விற்பனை :உ.பி., வாலிபர்கள் கைது

அனுப்பர்பாளையம்:நியூ திருப்பூரில் போதை சாக்லெட்களை விற்ற உ.பி., வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.பெருமாநல்லுார் போலீசார் நேற்று மாலை கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, நியூ திருப்பூர் ரவுண்டானா பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம், முபாரக்பூர் பகுதியை சேர்ந்த திரிலோகி சொங்கர், 27, கியாமுதின், 30, என்பதும் இருவரும் நியூ திருப்பூர் பகுதியில் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.இருவரும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து போதை மருந்து கலக்கப்பட்ட சாக்லெட்களை மொத்தமாக வாங்கி வந்து நியூ திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் தொழிலாளர்களுக்கு ஒரு சாக்லேட் 20 ரூபாய் வீதம் விற்று வந்துள்ளனர்.இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3.5 கிலோ போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X