பொது செய்தி

தமிழ்நாடு

பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று குறைகேட்பு முகாம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் குறைகேட்பு முகாம் இன்று நடக்கிறது.வாரந்தோறும் திங்கள்கிழமை பதிவு குறைகேட்பு முகாம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெறும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சட்டசபையில் மானியக் கோரிக்கையின் போது அறிவித்திருந்தார். அதன்படி, பதிவு குறைகேட்பு முகாமை மதுரையில் இன்று அமைச்சர் மூர்த்தி துவக்கி வைக்க

திருப்பூர்:திருப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் குறைகேட்பு முகாம் இன்று நடக்கிறது.வாரந்தோறும் திங்கள்கிழமை பதிவு குறைகேட்பு முகாம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெறும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சட்டசபையில் மானியக் கோரிக்கையின் போது அறிவித்திருந்தார். அதன்படி, பதிவு குறைகேட்பு முகாமை மதுரையில் இன்று அமைச்சர் மூர்த்தி துவக்கி வைக்க உள்ளார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தில் நடக்க உள்ளது.அதில், திருப்பூர் மாவட்டத்தில், நெருப்பெரிச்சலில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இன்று காலை, 11:00 முதல், 1:00 மணி வரை நடக்க உள்ளது. பொதுமக்கள் அந்தந்த பதிவுத்துறை அலுவலக எல்லைக்கு உட்பட்ட பதிவு அலுவலகங்களை பொறுத்து பத்திரப்பதிவு, திருமணப்பதிவு, வில்லங்க சான்று மற்றும் பதிவுத்துறை தொடர்பான பிற புகார்கள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக அளித்து தீர்வு பெறலாம் என்று, திருப்பூர் பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X