சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தங்கை உடல் மீட்பு

Added : அக் 11, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் அடுத்த, இச்சிப்பட்டி தேவராயம்பாளையத்தை சேர்ந்த ராமன்; இவரது மகன் சுந்தரம், 42; மகள் சகுந்தலா, 37. கிணற்றில் தவறி விழுந்த சகுந்தலாவை காப்பாற்ற சென்ற சுந்தரமும், கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவத்தில், கிணற்றுக்குள்ளேயே அண்ணன் - தங்கை இருவரும் உயிரிழந்தனர். தீயணைப்பு படை வீரர்கள், இரவு வரை மேற்கொண்ட மீட்பு பணியில், சகுந்தலாவை

பல்லடம்:பல்லடம் அடுத்த, இச்சிப்பட்டி தேவராயம்பாளையத்தை சேர்ந்த ராமன்; இவரது மகன் சுந்தரம், 42; மகள் சகுந்தலா, 37. கிணற்றில் தவறி விழுந்த சகுந்தலாவை காப்பாற்ற சென்ற சுந்தரமும், கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவத்தில், கிணற்றுக்குள்ளேயே அண்ணன் - தங்கை இருவரும் உயிரிழந்தனர்.

தீயணைப்பு படை வீரர்கள், இரவு வரை மேற்கொண்ட மீட்பு பணியில், சகுந்தலாவை மீட்டனர். கிணற்றுக்குள் விஷப்பாம்பு இருந்ததாலும், இருள் காரணமாகவும், சுந்தரத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.நேற்று காலை, தீயணைப்பு படை வீரர்கள் மீண்டும் மீட்புப் பணியில் இறங்கினர். கயிற்றின் உதவியுடன் மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களுடன் கிணற்றுக்குள் இறங்கினர். இதற்கிடையே, விஷப்பாம்பு பிடிக்கப்பட்டு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.
பல மணி நேரங்கள் தேடியும் உடலை கண்டுபிடிக்க இயலவில்லை. கிணற்று நீரை வெளியே இறைக்க தீர்மானிக்கப்பட்டது. மோட்டார் உதவியுடன் நீர் வெளியேற்றும் பணி துவங்கியது.இதற்குள் மீண்டும் இருள் சூழ்ந்ததால், இரண்டாவது நாள் மீட்புப் பணியிலும் தொய்வு ஏற்பட்டது. இரவு முழுவதும் தண்ணீர் இறைக்கும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து, இன்று மீண்டும் மீட்புப் பணிகளைத் தொடர தீயணைப்பு படைவீரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X