சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

'இப்போதே 79 வயசு... இனிமேல்...?'

Updated : அக் 12, 2021 | Added : அக் 11, 2021
Share
Advertisement
'கட்சி தாவுவார்; நமக்கும் ஏதாவது நல்ல பதவி கிடைக்கும் என நினைத்தால், இவர் இப்படி, 'பல்டி' அடிக்கிறாரே...' என, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கைப் பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.அமரீந்தர் சிங் பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததுமே, 'அவர் காங்கிரசிலிருந்து வெளியேறி, பா.ஜ.,வில் அடைக்கலம் ஆகி விடுவார்' என, அனைவரும் நினைத்தனர். இதனால்,
அக்கம் பக்கம்

'கட்சி தாவுவார்; நமக்கும் ஏதாவது நல்ல பதவி கிடைக்கும் என நினைத்தால், இவர் இப்படி, 'பல்டி' அடிக்கிறாரே...' என, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கைப் பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

அமரீந்தர் சிங் பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததுமே, 'அவர் காங்கிரசிலிருந்து வெளியேறி, பா.ஜ.,வில் அடைக்கலம் ஆகி விடுவார்' என, அனைவரும் நினைத்தனர். இதனால், காங்கிரசில் இருந்த அவரது ஆதரவாளர்கள் பலரும் உற்சாகமாக இருந்தனர். இவர்கள் நினைத்தது போலவே, முதல்வர் பதவியிலிருந்து வெளியேறியதும், டில்லியில் முகாமிட்டார் அமரீந்தர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, நீண்ட நேரம் பேச்சு நடத்தினார். இதனால் அமரீந்தர் பா.ஜ.,வில் இணைவது உறுதி என பேச்சு எழுந்தது. 'மத்தியில் பா.ஜ., ஆட்சியில் இருப்பதால் அமரீந்தருக்கு முக்கியமான பதவி கிடைக்கும். நமக்கும் ஏதாவது சிறிய பதவி கிடைக்கும். அதை வைத்து காலத்தை ஓட்டி விடலாம்' என, அவரது ஆதரவாளர்கள் கருதினர்.

ஆனால், 'காங்கிரசிலிருந்து விலகினாலும், பா.ஜ.,வில் இணைய மாட்டேன். பஞ்சாப் நலனுக்காக தொடர்ந்து பொது வாழ்வில் இருப்பேன்' என, அதிரடியாக அறிவித்தார் அமரீந்தர். இதைக் கேட்ட அவரது ஆதரவாளர்கள், 'இவரை நம்பி, முதலுக்கே மோசம் வந்து விட்டதே. இப்போதே அமரீந்தருக்கு, 79 வயதாகி விட்டது. இன்னும் எத்தனை காலத்துக்கு இவரை நம்பி காத்திருப்பது' என, புலம்புகின்றனர்.


பா.ஜ., லஹிரி விரைவில் மம்தா வலையில்?



'அடுத்து ஓட்டம் பிடிப்பது இவராகத் தான் இருக்கும்; இவர் இல்லை, அவர் தான் தாவத் தயாராகி வருகிறார்' என, மேற்கு வங்க மாநில பா.ஜ.,வில் பெரும் சலசலப்பு நிலவுகிறது.
இங்கு நடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்ததுமே, பா.ஜ.,வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் கட்சி தாவினர்.பணம், அதிகாரம் என, திரிணமுல் தலைவர்கள் துாண்டில் போடுவதால், பா.ஜ.,வைச் சேர்ந்த மேலும் சில தலைவர்களும் கட்சி தாவத் தயாராகி வருகின்றனர்.

இந்த பட்டியலில் முதலில் இருப்பது பா.ஜ., - எம்.எல்.ஏ.,வும், மத்திய நிதி அமைச்சகத்தின் முன்னாள் பொருளாதார ஆலோசகருமான அசோக் குமார் லஹிரி. தற்போதைய மேற்கு வங்க நிதி அமைச்சரான அமித் மித்ரா, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக வேறு ஒருவருக்கு இந்த பதவியை வழங்க மம்தா திட்டமிட்டுள்ளார்.

இதனால் எதிர் முகாமைச் சேர்ந்த அசோக் லஹிரியுடன், மம்தா கட்சியினர் திரை மறைவில் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 'எங்கள் கட்சிக்கு வந்தால், அடுத்த நாளே உங்களுக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்கும்' என, லஹிரியிடம் ஆசை வார்த்தை கூறி வருகின்றனர். இதற்கு லஹிரியிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை. 'பதவிக்கும், பணத்துக்கும் ஆசைப்படாதவர் யாருமே இல்லை. லஹிரி விரைவில் நாங்கள் விரித்த வலையில் விழுவார்' என்கின்றனர், திரிணமுல் கட்சியினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X