ராமர், கிருஷ்ணருக்கு தேசிய கவுரவம்; சட்டம் நிறைவேற்ற ஐகோர்ட் உத்தரவு

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (72)
Share
Advertisement
அலகாபாத்-'இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கடவுள்களான ராமர், கிருஷ்ணருக்கு தேசிய கவுரவம் அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.மனு தாக்கல்உத்தர பிரதேசத்தின் சத்ரசைச் சேர்ந்த ஆகாஷ் ஜாதவ் என்பவர், சமூக வலைதளத்தில் ஹிந்துக் கடவுள்களை அவமதித்து பதிவு வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக

அலகாபாத்-'இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கடவுள்களான ராமர், கிருஷ்ணருக்கு தேசிய கவுரவம் அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.latest tamil news


மனு தாக்கல்உத்தர பிரதேசத்தின் சத்ரசைச் சேர்ந்த ஆகாஷ் ஜாதவ் என்பவர், சமூக வலைதளத்தில் ஹிந்துக் கடவுள்களை அவமதித்து பதிவு வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அவர், ஜாமின் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:ஹிந்துக் கடவுள்களான ராமர், கிருஷ்ணர், காப்பியங்களான ராமாயணம், பகவத் கீதை, அவற்றை எழுதிய மகரிஷி வால்மீகி, மகரிஷி வேத வியாசர் ஆகியோர் போற்றப்பட வேண்டும். நம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அவர்களுக்கு தேசிய கவுரவம் அளிக்கும் வகையில் பார்லி.,யில் சட்டம் இயற்ற வேண்டும்.இந்திய கலாசாரத்தை குழந்தைகள் தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை பள்ளிகளில் பாடங்களாக சேர்க்க வேண்டும்.


latest tamil newsவிசாரணைஅயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், 'ராமர் நம் கலாசாரத்தின் ஆன்மா; ராமர் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது' என கூறியுள்ளது.ஒருவர் நாத்திகராக இருக்க அரசியல் சாசனம் அனுமதி அளிக்கிறது. அதற்காக மதங்களை இழிவுபடுத்த எவருக்கும் அதிகாரம் இல்லை. தான் வாழும் நாட்டின் கலாசாரம், கடவுள்களை மதிக்க வேண்டும். இதுபோன்று அவதுாறாக கருத்து தெரிவிக்கக் கூடாது.

மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவிப்போருக்கு எதிராக பல நாடுகளில் கடுமையான தண்டனை வழங்கும் சட்டங்கள் உள்ளன.இந்த வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளவர், 10 மாதங்களாக சிறையில் உள்ளார். ஆனால், வழக்கின் விசாரணை இதுவரை துவங்கவில்லை. அதனால், அவருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
11-அக்-202120:54:06 IST Report Abuse
Vittalanand ஹிந்து மதம் அடிப்படையில் 3 பிரிவுகள் அத்வை தம். துவைதம்,விசிஷ்டாதுவைத்தம். முதல் பிடிவு ஈஸ்வரனை ய இரண்டாம் பிரிவு கிரிஷ்ணனையும் மூன்றாம் பிரிவு விஷ்ணுவையும் வணங்குவார்கள். இரண்டாம் பிரிவும் மூன்றாம் பிரிவும் ஒன்றாகவும் முதக் பிரிவு உற்றிலும் வேறாகவும் அடிப்படஒயில் உள்ளன.கி சிவனுக்கு லிங்க வழிபாடு தான் பிரதானம்.லிங்கத்திலேயே ஆக்குகுதல் காத்தல் அழித்த ல் அனைத்தும் அடங்கிவிடுகின்றன. லிங்கம் உறுவமில்லாதது. பிற விஷ்ணு வழி பாட்டில் உருவ வழுப்பாடு உண்டு. சிதம்பரம் விதி விலக்கு. ராமரும் கிருஷ்ணரும் வாழ்ந்து காட்டியவர்கள். சகலமும் கைலாய மலையில் ஈசனிடம் அடங்கி விடுகிறது. ராமரே ஈஸ்வரனை வணங்கி உள்ளார்.
Rate this:
வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
12-அக்-202112:33:50 IST Report Abuse
வல்லவரையன்“ஒண்ணா இருக்க கத்துக்கணும்.. இந்த உண்மையச் சொன்னா ஒத்துக்கணும்..”...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
12-அக்-202115:35:31 IST Report Abuse
Visu Iyerகாஞ்சிபுரம் பெருமாள் கோயிலில் இஸ்லாமியர்கள் பங்களிப்பு உண்டு.. ஒரு கோவில் குளத்தில் இஸ்லாமியரும் இந்துக்களும் பயன்படுத்துகின்றனர்.. எந்த வித வேறுபாடும் பாராமல்.. இன்னும் சில கோவில்களில் இது போன்ற கிருத்துவ இஸ்லாமிய இந்துக்கள் ஒற்றுமை தமிழ்நாட்டில் இருக்குதுங்க... அடுத்தவர்களுக்கு சொல்லி தருவது தான் தமிழ்நாடு...தமிழ்நாட்டில் இருந்து அவர்கள் பாடம் படித்துக் கொள்ள வேண்டும்....
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
12-அக்-202116:06:16 IST Report Abuse
Visu Iyerஅப்படினா.. காணாபத்யம், கௌமாரம், சைவம் வைணவம் சாக்தம் இவையெல்லாம் வேற பிரிவா... என்னங்கப்பா ஆளுக்கு ஆள் ஒன்னு சொல்றீங்க... இந்து மதம் என்பது....////...
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
11-அக்-202119:29:49 IST Report Abuse
Vena Suna அந்த நீதிபதி வாழ்க. இங்கே மதத்தை தாக்கும் கறுப்பர்களை (மன கருப்பு) உள்ளே போடவும்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
12-அக்-202115:36:56 IST Report Abuse
Visu Iyerநீதிபதி கடவுள் என்று தானே சொல்லி இருக்கிறார் ... இறைவன் என்று சொல்லவில்லை பார்த்தீர்களா.. இறைவன் வேறு கடவுள் வேறு தானே.. இதை புரிந்து கொண்டால் புத்திசாலி மற்றவர்கள் புரிந்த பின் புத்திசாலி...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
12-அக்-202116:05:23 IST Report Abuse
Visu Iyerஆம் இங்கே மதத்தை தாக்குபவர்கள் இருக்கிறார்கள் என்பதை சரியாக அடையாளம் காட்டுகிறீர்கள்.....
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
11-அக்-202119:12:29 IST Report Abuse
 rajan புகைப் படங்கள் அருமை. தனியாக வெளியிங்கள் FRAME போடுவது மாதிரி.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
12-அக்-202115:37:19 IST Report Abuse
Visu Iyerஅதையும் ஓசியில் தர வேண்டும் என்று விரும்பும் மோடி ஜி ஆட்சி என்று யாராவது சொல்லிட போறாங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X