பொது செய்தி

இந்தியா

நார்வே நிறுவனத்தை கையகப்படுத்திய ரிலையன்ஸ்

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி-நார்வே நாட்டைச் சேர்ந்த ஆர்.இ.சி., நிறுவனத்தை, நம் நாட்டின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கையகப்படுத்திஉள்ளது.நம் நாட்டில் முன்னணி வணிக நிறுவனமான ஆர்.ஐ.எல்., எனப்படும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் துணை நிறுவனம், ஆர்.என்.இ.எஸ்.எல்., எனப்படும் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட். சீனாவைச் சேர்ந்த 'சீன நேஷனல் புளூஸ்டார்' நிறுவனத்தின் அங்கமாக ஆர்.இ.சி.,

புதுடில்லி-நார்வே நாட்டைச் சேர்ந்த ஆர்.இ.சி., நிறுவனத்தை, நம் நாட்டின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கையகப்படுத்திஉள்ளது.latest tamil news


நம் நாட்டில் முன்னணி வணிக நிறுவனமான ஆர்.ஐ.எல்., எனப்படும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் துணை நிறுவனம், ஆர்.என்.இ.எஸ்.எல்., எனப்படும் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட். சீனாவைச் சேர்ந்த 'சீன நேஷனல் புளூஸ்டார்' நிறுவனத்தின் அங்கமாக ஆர்.இ.சி., சோலார் ஹோல்டிங்ஸ் நிறுவனம் விளங்குகிறது.

நிஐரோப்பிய நாடான நார்வேயில் துவங்கி, தற்போது ஆசிய நாடான சிங்கப்பூரை தலைமைஇடமாக வைத்து செயல்பட்டு வரும் ஆர்.இ.சி., நிறுவனம், 20 ஆண்டுகளுக்கு மேலாக சோலார் பேனல் மற்றும் சோலார் செல்கள் உற்பத்தியில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமாக உள்ளது.

இந்நிலையில் ஆர்.இ.சி., நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை 5782 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக தேசிய பங்குச்சந்தைக்கு ஆர்.ஐ.எல்., தெரிவித்து உள்ளது.இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது;ஆர்.இ.சி., நிறுவனத்தை வாங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் வாயிலாக சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க முடியும்.


latest tamil news


இந்தியாவுக்கு சூரிய பகவான் அருள்பாலிப்பார். ஆர்.இ.சி., நிறுவனத்தில் ௧,௫௦௦க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் இனி, ரிலையன்ஸ் நிறுவன் ஊழியர்களுடன் இணைந்து சூரிய மின் சக்தி உற்பத்தியில் சாதனை படைப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.இதேபோல், ஆர்.என்.இ.எஸ்.எல்., நிறுவனம், நம் நாட்டைச் சேர்ந்த 'ஸ்டெர்லிங் அண்ட் வில்சன்' என்ற சோலார் நிறுவனத்தின், 40 சதவீத பங்குகளை, 3,630 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும் நேற்று அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padmanabhan - coimabatore,இந்தியா
11-அக்-202119:47:28 IST Report Abuse
padmanabhan Gratitude less people who commenting against an Indian entrepreneur who become No.1 Richest Asian due to his hard work and honesty Providing employment to crores of people in India as well as in Overseas. we may need him more than what may need us.
Rate this:
Cancel
Venramani Iyer - chennai,இந்தியா
11-அக்-202117:31:35 IST Report Abuse
Venramani Iyer திராவிட கும்பல் கொடுத்த காசை குடித்து அழித்துவிட்டு பின்னர் அவன் மட்டும் முன்னறேறானே என்று பொறாமை படும். இதுதான் திராவிடம்
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
11-அக்-202114:38:53 IST Report Abuse
Vivekanandan Mahalingam ஒரு இந்தியன் வளர்ந்து உலக அளவில் தொழில் செய்ய கூடாது - நம்ப ஊர் நண்டு களுக்கு கிழக்கிந்திய கம்பெனி தான் பிடிக்கும். அம்பானி, அதானி, டாடா, பிர்லா, இன்போசிஸ், விப்ரோ, ஷிவ நாடார் கண்டு நாம் பெருமைப்பட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X