பொது செய்தி

இந்தியா

தாஜ் மஹாலில் டென்மார்க் பிரதமர்

Added : அக் 11, 2021
Share
Advertisement
ஆக்ரா-டென்மார்க் நாட்டு பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன், அவரது கணவர் போ டெங்பெர்க் ஆகியோர் நேற்று, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். ஐரோப்பிய நாடான டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று முன் தினம் டில்லி வந்தடைந்த அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி

ஆக்ரா-டென்மார்க் நாட்டு பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன், அவரது கணவர் போ டெங்பெர்க் ஆகியோர் நேற்று, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

ஐரோப்பிய நாடான டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று முன் தினம் டில்லி வந்தடைந்த அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து பேசினார். பின், உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு தன் கணவர் போ டெங்பெர்க்குடன் பிரதமர் மெட்டே நேற்று முன் தினம் இரவு வந்தார். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை நேற்று காலையில் மெட்டேவும் அவரது கணவரும் சுற்றிப் பார்த்து வியந்து ரசித்தனர். அங்கு உள்ள பார்வையாளர் பதிவேட்டில் 'மிக அற்புதமான, அழகிய இடம்' என மெட்டே பதிவு செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X