பொது செய்தி

இந்தியா

எச்சில் துப்புவதை தவிர்க்க ரயில்வே புது உத்தி

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி-ரயில் நிலையங்களில் பொது மக்கள் எச்சில் துப்புவதை முற்றிலுமாக ஒழிக்க, 'பாக்கெட்' அளவிலான சிறிய பைகளை வினியோகிக்கும் தானியங்கி இயந்திரங்களை அமைக்க, ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.ரயில் நிலையங்களில் பொது மக்கள் எச்சில் துப்புவதால் மிகப் பெரிய அளவில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கொரோனா தொற்று பரவலுக்கு பின் இதுபோல எச்சில் துப்புபவர்கள்

புதுடில்லி-ரயில் நிலையங்களில் பொது மக்கள் எச்சில் துப்புவதை முற்றிலுமாக ஒழிக்க, 'பாக்கெட்' அளவிலான சிறிய பைகளை வினியோகிக்கும் தானியங்கி இயந்திரங்களை அமைக்க, ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.latest tamil news


ரயில் நிலையங்களில் பொது மக்கள் எச்சில் துப்புவதால் மிகப் பெரிய அளவில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கொரோனா தொற்று பரவலுக்கு பின் இதுபோல எச்சில் துப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும் இதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.இந்நிலையில் இந்த பிரச்னையை சமாளிக்க, மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த 'ஈஸி ஸ்பிட்' என்ற நிறுவனம் புதிய உத்தி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் துணை நிறுவனர் ரிது மல்ஹோத்ரா கூறியதாவது:ரயில் நிலையங்களில் எச்சில் துப்புபவர்களுக்காக பாக்கெட் அளவிலான சிறிய பைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி இயந்திரங்களில் இருந்து இந்த பைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த பைகளுக்குள் ஒருவர் 15 - 20 முறை எச்சில் துப்ப இடம் உள்ளது. அந்த எச்சிலை உறிஞ்சும் விதமாக பைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எச்சிலில் உள்ள கிருமிகள் வெளியே பரவாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைகள் மக்கும் தன்மை உடையவை. இதை மண்ணில் வீசினால், அதில் கலந்துள்ள விதைகள் மரங்களாக முளைக்கும் தன்மை உடையது. சிறிய பைகளுடன், சிறிய கன்டெய்னர்கள் மற்றும் பெரிய குப்பை கூடைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.


latest tamil news


நாக்பூர் மற்றும் அவுரங்காபாத் நகராட்சி மற்றும் சில ரயில் நிலையங்களில் ஏற்கனவே இந்த தானியங்கி இயந்திரங்களை பொருத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.மேற்கு, வடக்கு மற்றும் மத்திய ரயில்வே நிலையங்களில் இந்த தானியங்கி இயந்திரங்களை பொருத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பாக்கெட் அளவிலான ஒரு பைக்கு, 5 - 10 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
11-அக்-202116:21:28 IST Report Abuse
சீனி , எச்சில் துப்புவது என்பது ஒரு பழக்க வியாதியாகும். வாய்க்கு ஒட்டும் பிளாஸ்திரி கொடுத்தான் பிரச்சனை தீரும்.
Rate this:
Cancel
Thiruselvam - Pondicherry,இந்தியா
11-அக்-202115:18:18 IST Report Abuse
Thiruselvam One cannot spit in the bag and keep the same for subsequent uses are not possible and safeguard the same, and while keeping the pouch they may contaminate their hand and the places where they are touching. Instead of the above multi-use pouch, single use pouches can be tried.
Rate this:
Cancel
Bairav Kumar - Chennai,இந்தியா
11-அக்-202113:55:02 IST Report Abuse
Bairav Kumar அப்படியே சென்னை விமான நிலையத்திலும் இந்த திட்டத்தை செயல்படுத்துங்கள். ஒருமுறை எச்சி துப்பினால் ருபாய் 500 அபராதம் தான் சிறந்த வழி. இப்ப குடுக்கற பேக்ல எச்சியதுப்பி கீழே போடுவாங்க பைன் பைன் ஒன்றே சிறந்த வழி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X