பொது செய்தி

தமிழ்நாடு

3.7 கோடி ரூபாய் மதிப்பிலான ஒருங்கிணைந்த தாலுகா அலுவலகம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் 3.7 கோடி ரூபாய் மதிப்பிலான ஒருங்கிணைந்த தாலுகா அலுவலக கட்டுமானப் பணி முடியும் தருவாயில் உள்ளது.கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை அருகே தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமூக பாதுகாப்பு திட்டம், குடிமைப் பொருள், தேர்தல் தனி தாசில்தார் அலுவலகம் பல்வேறு அலுவலகங்கள் உள்ளது. பல

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் 3.7 கோடி ரூபாய் மதிப்பிலான ஒருங்கிணைந்த தாலுகா அலுவலக கட்டுமானப் பணி முடியும் தருவாயில் உள்ளது.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை அருகே தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமூக பாதுகாப்பு திட்டம், குடிமைப் பொருள், தேர்தல் தனி தாசில்தார் அலுவலகம் பல்வேறு அலுவலகங்கள் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம் என்பதாலும், அலுவலகம் மிகவும் குறுகியதாக உள்ளது.

மேலும், மழைக் காலங்களில் கட்டடத்தில் சில இடங்களில் மழைநீர் ஒழுகியதால், அலுவலர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.இதனையொட்டி, தற்போதைய அலுவலகம் பின்புறம் 3.7 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த புதிய தாலுகா அலுவலக கட்டுமான பணிகள் துவங்கி நடந்தது. லிப்ட் வசதியுடன் கூடிய மூன்று மாடிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தாலுகா அலுவலக கட்டுமானப் பணிகள் முடிந்து வர்ணம் பூசும் பணி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X