தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

Added : அக் 11, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயபாளையம், சங்கராபுரம், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனங்களில் வரும் உறவினர்கள் மருத்துவமனை வெளியே

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயபாளையம், சங்கராபுரம், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனங்களில் வரும் உறவினர்கள் மருத்துவமனை வெளியே சாலையோரங்களில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்த வருகின்றனர்.அதுமட்டுமின்றி சாலையோர கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து கடை பெயர் பலகையை வைத்துள்ளனர்.கலெக்டர் அலுவலகம், மார்க்கெட் கமிட்டி, டி.எஸ்.பி., அலுவலகம், அரசு பள்ளிகள் உள்ள இந்த சாலை வழியாகத்தான் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச்செல்லும் லாரி, டிராக்டர்களும் செல்கின்றன.

இதனால் இந்த சாலையையொட்டி, நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து தடை ஏற்படுவதுடன். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்கள் செல்வதற்குகூட வழியின்றி தவிக்கும் நிலை ஏற்படுகிறது.எனவே கச்சிராயபாளையம் சாலை மருத்துவமனை பகுதியில் வாகனங்களை நிறுத்த முறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X