ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

Added : அக் 11, 2021
Share
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கான ஓட்டு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் ஸ்ரீதர், பொது பார்வையாளர் விவேகானந்தன் ஆகியோர் தனித் தனியாக ஆய்வு செய்தனர்.கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 46 ஊராட்சிகளில் ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தல் 249 ஓட்டுச்சாவடி மையங்களில் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.தேர்தல் முடிந்ததும், ஓட்டுப்பெட்டிகளுக்கு 'சீல்'

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கான ஓட்டு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் ஸ்ரீதர், பொது பார்வையாளர் விவேகானந்தன் ஆகியோர் தனித் தனியாக ஆய்வு செய்தனர்.

கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 46 ஊராட்சிகளில் ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தல் 249 ஓட்டுச்சாவடி மையங்களில் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.தேர்தல் முடிந்ததும், ஓட்டுப்பெட்டிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையமான மேலுார் டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இம்மையத்தை கலெக்டர் ஸ்ரீதர் நேற்று ஆய்வு செய்தார். 'ஸ்ட்ராங்க் ரூம்', ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள அறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டார்.ஓட்டு எண்ணிக்கை மையத்தின் வெளிப்புறம், வளாகம், ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங்க் ரூம்' ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்திட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறையில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியும், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.தொடர்ந்து தேர்தல் பொது பார்வையாளர் விவேகானந்தன் ஓட்டு எண்ணிக்கை மையத்தினை பார்வையிட்டு, பாதுகாப்பு பணிகள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் பாரதி உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X