பொது செய்தி

தமிழ்நாடு

தியாகதுருகம் ஒன்றிய ஓட்டு எண்ணும் மையத்தில் புதுமை .ஓட்டுச்சீட்டு கலரில் பணியாளர்களுக்கு சீருடை தயார்

Added : அக் 11, 2021
Share
Advertisement
தியாகதுருகம் : ஓட்டு எண்ணும் மையத்தில் முடிவுகளை விரைவாக அறிவிக்கவும், குழப்பம் ஏற்படாமல் இருக்கவும் ஓட்டுச்சீட்டு வண்ணங்களில் தனித்தனி சீருடை அணிந்து ஊழியர்கள் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதில், தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளில் 355 பதவிகளுக்கு

தியாகதுருகம் : ஓட்டு எண்ணும் மையத்தில் முடிவுகளை விரைவாக அறிவிக்கவும், குழப்பம் ஏற்படாமல் இருக்கவும் ஓட்டுச்சீட்டு வண்ணங்களில் தனித்தனி சீருடை அணிந்து ஊழியர்கள் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதில், தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளில் 355 பதவிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது.இதில், ஒரு மாவட்ட கவுன்சிலர், 2 ஒன்றிய கவுன்சிலர்கள், 3 ஊராட்சித் தலைவர்கள், 62 வார்டு உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 68 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் முடிந்து பதிவான ஓட்டுச்சீட்டுகள் அடங்கிய ஓட்டுப் பெட்டிகள், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஓட்டு எண்ணும் மையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.நாளை 12ம் தேதி காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்க உள்ளது.தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சீனிவாசன், செந்தில்முருகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இந்திராணி ஆகியோர் தலைமையில் 550 ஊழியர்கள் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஓட்டுகள் விரைவாக எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு ஓட்டு எண்ணப்படுகிறது.ஒவ்வொரு சுற்றுக்கும் குறிப்பிட்ட ஊராட்சிகள் ஒதுக்கப்பட்டு அந்தந்த பதவிகளுக்கான ஓட்டு எண்ணும் முகவர்கள் மட்டும் அதற்கான நேரத்தில் உள்ளே அனுமதிக்கப் படுவார்கள்.இதனால் ஓட்டு எண்ணும் மையத்தில் அதிக கூட்டம் கூடுவது முற்றிலும் தவிர்க்கப்படும். இதற்காக 25 அறைகளில் 100 டேபிள்கள் போடப்பட்டுள்ளது.

ஓட்டுச் சீட்டுகளை வகை பிரித்தலுக்காக 8 அறைகள், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 2 அறைகள், ஒன்றிய கவுன்சிலருக்கு 4 அறைகள், ஊராட்சித் தலைவருக்கு 4 அறைகள், வார்டு உறுப்பினருக்கு 7 அறைகள் ஓட்டு எண்ணிக்கைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது.ஓட்டு எண்ணும் போது குழப்பம் ஏற்படாமல் இருக்க அந்தந்த பதவிகளுக்கான ஓட்டுச் சீட்டு வண்ணத்தில் ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்பட உள்ளது.

மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான ஓட்டுகளை எண்ணும் ஊழியர்களுக்கு மஞ்சள் நிறமும், ஒன்றிய கவுன்சிலர் பச்சை நிறம், ஊராட்சித் தலைவர் பிங்க் நிறம், ஊராட்சி வார்டு உறுப்பினர் வெள்ளை நிற சீருடை அணிந்து ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள்.மேலும், ஓட்டுச்சீட்டுகள் பிரிக்கப்பட்டு ஓட்டு எண்ணும் இடத்திற்கு கொண்டு செல்வதற்கு கூட அந்தந்த கலரில் பிளாஸ்டிக் பக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது.இதன் மூலம் குழப்பமின்றி, விரைவாக ஓட்டுகள் எண்ணி முடித்து உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்க முடியும் என்பதால் கலெக்டரிடம் அனுமதி பெற்று அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X