தமிழ்நாடு

 கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து முளைப்பு  விரைந்து கொள்முதல் செய்திட விவசாயிகள் கோரிக்கை

Added : அக் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் அடுக்கி வைத்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடலுார் மாவட்டத்தில், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட தாலுகாக்கள் டெல்டா பகுதிகள். கடலுார், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி உள்ளிட்ட
 கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து  முளைப்பு    விரைந்து கொள்முதல் செய்திட விவசாயிகள் கோரிக்கை

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் அடுக்கி வைத்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட தாலுகாக்கள் டெல்டா பகுதிகள். கடலுார், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி உள்ளிட்ட தாலுகாக்கள் டெல்டா அல்லாத பகுதிகள். இவற்றில் ஆண்டுதோறும் சம்பா, குறுவை பட்டங்களில் 3 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். விவசாயிகளின் வசதிக்காக செப்டம்பர் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

கடலுார் மாவட்டத்தில் வழக்கமாக 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ஏக்கர் வரை மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்படும். நடப்பாண்டு குறுவை பட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆகஸ்ட் இறுதி முதல், அறுவடைப் பணி துவங்கியது. இதற்காக மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 121 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.வழக்கமாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை தான் கொள்முதல் நடக்கும். கூடுதல் சாகுபடி காரணமாக இந்தாண்டு கடந்த செப்டம்பர் 28ம் தேதி வரை கொள்முதல் நடந்தன. 29ம் தேதி முதல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன. இருந்தும் முழு அளவில் நெல் கொள்முதல் செய்யாததால், பல கொள்முதல் நிலையங்களில் விற்காமல் மீதமிருந்த விவசாயிகளின் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைத்தனர். பல இடங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளும் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் ஏற்கனவே செயல்பட்ட 19 இடங்களில் மட்டும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

மேலும், பெருமாள் ஏரி பாசன பின் சம்பா அறுவடைக்காக 6 கொள்ளுதல் நிலையங்கள் புதிதாக திறக்கப்பட்டது. இதில், நெல் முதல் ரகம் (சன்னரகம்) குவிண்டால் ரூ. 2,060; மோட்டா ரகம் குவிண்டால் ரூ. 2,015 என, விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நனையும் அவலம்மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்வதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் கொள்முதல் செய்த மற்றும் விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனைந்து முளைத்துள்ளன. தார்ப்பாய் போட்டு மூடியிருந்தாலும் தண்ணீர் தேங்கியதால் அடியில் அடுக்கி வைத்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் முளைத்து, சேதமடைந்துள்ளன.

குறிஞ்சிப்பாடி தாலுகா, பூண்டியாங்குப்பத்தில் செயல்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 29ம் தேதி முதல் மூடப்பட்டிருந்தது. இங்கு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மற்றும் விவசாயிகள் கொண்டு வந்து விற்காதது உட்பட 15 ஆயிரம் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்தன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். நேரடி கொள்முதல் நிலையங்களில் மீதமுள்ள நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
11-அக்-202110:59:28 IST Report Abuse
duruvasar அடிமை அரசு ஆண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம். நேற்று கூட குண்டுமணியளவு தண்ணீர்கூட கடலில் கலக்காமல் இருக்க பூண்டி நீர் தேக்கத்திலிருந்து வெறும் 1000 கன அடி தண்ணீரை திறந்து சாதனை படைத்தது திமுக அரசு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X