திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாக நிலத்தடி நீர் மட்டம் அதிகபட்சமாக 7 அடியும், குறைந்தபட்சமாக ஒரு அடியும் அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மழை மறைவு மாவட்டமாக இருப்பதால் இங்கு பெய்யும் மழை குறைவு. ஆண்டுச் சராசரி 836 மி.மீ., ல் பாதியை தாண்டினாலே கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து தப்பி விடலாம்.அதற்கும் குறைவாக பெய்தால் அவ்வளவுதான். குடிக்கவும், விவசாயத்திற்கும் தேவையான தண்ணீரை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். சில ஆண்டுகளாக மழைநீரை சரியாக சேமிக்காதது, போர்வெல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருகிறது. 2019 ல் 10 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 2020 ல் 12 அடிக்கு மேல் சரிந்தது.
இந்தாண்டு துவக்கத்தில் இருந்தே எதிர்பார்த்ததை விட போதிய மழை பெய்ததால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை 8 மாதங்களில் அதிகபட்சமாக 7 அடியும், குறைந்தபட்சமாக ஒரு அடியும் உயர்ந்துள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.மழைக்கு முன்பாக விவசாய நிலங்களில் பண்ணை குட்டை அமைக்கலாம்.
வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை மேலும் அதிகரிக்கலாம். மத்திய அரசின் 'ஜல் சக்தி அபியான்' திட்டத்தில் மழைநீரை சேமிக்க, நீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர் மட்டம் ஒப்பீடு------------------மாதம் / 2020 (அடி) / 2021 (அடி)---------------------------பிப்ரவரி / 10.34 / 6.61மார்ச் / 10.51 / 7.04ஏப்ரல் / 10.94 / 9.19மே / 11.20 / 8.36ஜூன் / 11.72 / 8.61ஜூலை / 11.57 / 8.83ஆகஸ்ட் / 16.47 / 9.00செப்டம்பர் / 11.67 / 9.16-----------------------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE