பொது செய்தி

தமிழ்நாடு

"மருத்துவ டாக்டரான உங்களுக்குள்ளும் ஒரு கவிஞர் மறைந்திருக்கிறார்..."

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதாம். இதற்கு காரணம், வட கிழக்கு பருவ மழையோ, தென் மேற்கு பருவ மழையோ அல்லவாம். உள்ளாட்சித் தேர்தலுக்கான மது மழை தானாம்!மருத்துவ டாக்டரான உங்களுக்குள்ளும் ஒரு கவிஞர் மறைந்திருக்கிறார். அந்த கவிஞரும் கிண்டல், கேலி நிறைந்தவர் என்பதை, உங்களின் இந்த அறிக்கை
பேச்சு_பேட்டி_அறிக்கை, விசிக, ரவிக்குமார், பாஜக, பாஜ, ஆஷிஷ் மிஸ்ரா

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதாம். இதற்கு காரணம், வட கிழக்கு பருவ மழையோ, தென் மேற்கு பருவ மழையோ அல்லவாம். உள்ளாட்சித் தேர்தலுக்கான மது மழை தானாம்!


மருத்துவ டாக்டரான உங்களுக்குள்ளும் ஒரு கவிஞர் மறைந்திருக்கிறார். அந்த கவிஞரும் கிண்டல், கேலி நிறைந்தவர் என்பதை, உங்களின் இந்த அறிக்கை காட்டுகிறது!


தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
59 ஆண்டுகளுக்கு முன், சீனாவுடன் நடந்த போரின் போது, சீனாவுக்கு ஆதரவாக, இந்தியாவுக்கு எதிராக, துரோகம் செய்தது கம்யூனிஸ்ட் கட்சி. அதுபோல இப்போதும் இந்தியாவுக்கு எதிராக, சீனாவுக்கு ஆதரவாக துரோகம் செய்ய மாட்டீர்கள் தானே!


ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடா நிறுவனம் பெற்றுள்ளதை கிண்டல் செய்துள்ள கம்யூ.,க்களுக்கு இப்படி பதிலளித்துள்ளீர்கள். எனினும், ஏலம் போன தொகை ரொம்ப குறைச்சலாக தெரிகிறதே

தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி அறிக்கை:
காங்கிரஸ் ஆளாத மாநிலங்களில் ஏற்படும் வன்முறைகளை வாய் கிழிய பேசும் காங்கிரஸ் கட்சி, தான் ஆளும் ராஜஸ்தானில் தலித் ஒருவர் அடித்தே கொல்லப்பட்டதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது. இதை ராகுல், அவர் சகோதரி பிரியங்காவும் கண்டிப்பதில்லை.


மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்ட கொள்கை கொண்டது காங்., என்பது தான் உலகம் அறிந்தது ஆயிற்றே... அவர்களுக்கு இப்போதைய ஒரே குறி, உ.பி., மட்டும் தான்!


latest tamil news


தமிழக பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா அறிக்கை:
பாப்பான் சத்திரம் காசி விஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி கோவில்களின் நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனியார் நிறுவனம், 9.5 கோடி ரூபாய் தர வேண்டும். நான்கு வாரங்களுக்குள் அங்கிருந்து அந்த நிறுவனத்தை அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாய்மையே வெல்லும். ஹிந்து விழிப்புணர்வே இன்றைய தேவை.


ஒரு சிலருக்கு ஏற்பட்ட ஹிந்து விழிப்புணர்வால் இது கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த ஹிந்துக்களும் விழிப்பு பெற்றால், ஆக்கிரமிப்பே இருக்காது என்கிறீர்கள். பார்ப்போம்!

மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை:
உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவிற்கு சமீபத்தில் சென்ற பிரதமர் மோடி, எப்போதும் போல பகட்டாகப் பேசியுள்ளார். அந்த மாநிலத்தை சேர்ந்த, தன் அமைச்சரவையில் உள்ள அமைச்சரின் மகனால் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லவில்லை, வருத்தம் தெரிவிக்கவில்லை.


பிரச்னையை திசை திருப்புவதில் காங்கிரசை விட, கம்யூ.,க்கள் தான் கில்லாடிகள் என்பதில், மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

தமிழக பா.ஜ., கலாசார பிரிவு தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை:
சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.,வால் மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட எதுவும் கிடைக்காது. அதே நேரத்தில், அச்சுறுத்தல்கள், கொலைகள், கொள்ளை மற்றும் திருட்டை மட்டுமே மக்கள் பெறுகின்றனர். மக்கள் தவறிழைத்து விட்டனர்; தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தி விட்டனர்.


இப்படியே இன்னும் ஐந்தாண்டுகளுக்கு புலம்ப வேண்டியது தான்; வேறு வழியில்லை. அதற்குள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விடும் என நம்புவோம்!


latest tamil news


விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை:
உ.பி.,யில் விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்த வழக்கில், மத்திய உள்துறை இணைஅமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தன் மேற்பார்வையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்.


மத்திய இணையமைச்சர் மகனை கைது செய்ய வேண்டும் என்று தான் இது வரை அனைவரும் கோரி வந்தீர்கள்... இப்போது, சிறப்பு நீதிமன்றம் கேட்கிறீர்களே... பா.ஜ.,வினர் சிக்கினால் விட மாட்டீர்கள் போலிருக்கிறதே!

அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு மாநில இணைச் செயலர், கா.லியகாத் அலிகான் பேச்சு:
உள்ளாட்சித் தேர்தலில், தினகரனின், அ.ம.மு.க., வேட்பாளர்களை போட்டியிட வைத்து, அ.தி.மு.க., வேட்பாளர்களிடம் சசிகலா வீண் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்பது தொண்டர்களுக்கு தெரியும். தனிப்பட்ட சசிகலாவால், அ.தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது.


தனியொரு நபர் நினைத்தால் கைப்பற்றும் அளவுக்கு அ.தி.மு.க., என்ன நாயர் டீ கடையா... தமிழகத்தை ஆண்ட கட்சி என்பதை அவர் மறந்திருப்பாரோ?

தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்னையின்றி நடந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., 100 சதவீதம் வெற்றி பெறும். சமீபத்தில் நடந்த தேர்தல் முடிவே, தி.மு.க., மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.


உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆட்சிக்கு வந்த நான்கு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்தால் நன்றாகவா இருக்கும்... அதற்காக மக்கள் வைத்துள்ள நம்பிக்கை என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலர் பெ.சண்முகம் அறிக்கை:
வெளிநாட்டு ஏஜன்ட் என்று துாற்றினர். பாகிஸ்தான் உளவாளிகள் என்று முத்திரை குத்தினர். ஆட்சிக்கு எதிராக பேசினால், எழுதினால் தேச விரோதம் என்று கூறி சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் கார்களை ஏற்றி கொலை செய்கின்றனர். மக்கள் அமைதியாகத் தான் இன்னும் இருப்பரா?


எப்படியாவது மத்திய அரசுக்கு எதிராக மக்களை துாண்டி விட வேண்டும் என்பது கம்யூ.,க்கள் மற்றும் அதன் கிளை அமைப்புகளின் எண்ணம். அது உங்கள் அறிக்கையில் தௌிவாகிறது!

தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி:
தமிழகத்தில், 23 சதவீதமாக உள்ள வனப்பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பக்கத்து மாநில வனத்துறை பரப்பையும் இணைத்துக் கொள்ள போகிறீர்களா என, ஒரு கிண்டல் பிடித்த நபர் கேட்கிறார்!

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
San - Mumbai,இந்தியா
11-அக்-202118:14:50 IST Report Abuse
San No assets like land and buildings transferred yet. They will be in 2nd trenche
Rate this:
Cancel
San - Mumbai,இந்தியா
11-அக்-202118:13:13 IST Report Abuse
San Assets like office buildings lands not transferred through this auction. They will be done in 2nd trenche
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
11-அக்-202115:12:45 IST Report Abuse
M  Ramachandran அவர்களுக்கு (கம்யூனிஸ்டுகளுக்கு) சீனாவுக்கோ ரசியாவிற்கோ ஆதரித்து பேசவேண்டும் பிறந்த நாட்டையையோ உண்டு உறங்கிய நாட்டையோ கேவல படுத்தலாம். அது தான் அவர்கள் தற்சமய சித்தாந்தம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X