சி.பி.ஐ., விசாரணைக்கான ஐகோர்ட் உத்தரவு ரத்து| Dinamalar

சி.பி.ஐ., விசாரணைக்கான ஐகோர்ட் உத்தரவு ரத்து

Added : அக் 11, 2021 | |
புதுடில்லி : அதிகாரிகளின் நிதி முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கான உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.சத்தீஸ்கர் மாநில வளர்ச்சி மையம், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் சார்பில் 10 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.இதுகுறித்த பொதுநல மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 31 அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு

புதுடில்லி : அதிகாரிகளின் நிதி முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கான உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.


சத்தீஸ்கர் மாநில வளர்ச்சி மையம், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் சார்பில் 10 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.இதுகுறித்த பொதுநல மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 31 அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனுவை விசாரித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: எதிர்தரப்பினர் முறைகேடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.இதன் அடிப்படையில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்ய முடியாது என நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு சமீபத்தில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X