சென்னை: விஜயதசமிக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்களை திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு நாளை (அக்.,12) விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. அந்த நாட்களில் பொதுமக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவராத்திரி, விஜயதசமி பண்டிகை காலத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், வரும் வெள்ளிக்கிழமை (அக்.,15) விஜயதசமி மற்றும் நவராத்திரி நிறைவு நாளாக கொண்டாடப்படும் சூழலில், தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோயம்புத்தூரை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை(அக்.,12) விசாரணைக்கு வரவுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE