பாம்பனில் பச்சை நிறமாக மாறிய கடல் நீர்

Added : அக் 11, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் பச்சை நிறமாக கடல்நீர் மாறியதால், ரசாயனம் கலந்திருக்குமோ என மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.பாம்பன் தென் கடற்கரையில் நேற்று துர்நாற்றத்துடன் கடல்நீரில் பச்சை வண்ணம் பரவி கிடந்தது. புதிய ரயில் பாலம் கட்டுமானத்தில் இருந்து ரசாயன கலவை கடலில் கலந்ததால், கடல்நீரின் நிறம் மாறி உள்ளதாக மீனவர்கள் கூறினர். ஆனால் தென்மேற்கு பருவ
 பாம்பனில் பச்சை நிறமாக  மாறிய  கடல் நீர்


ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் பச்சை நிறமாக கடல்நீர் மாறியதால், ரசாயனம் கலந்திருக்குமோ என மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.

பாம்பன் தென் கடற்கரையில் நேற்று துர்நாற்றத்துடன் கடல்நீரில் பச்சை வண்ணம் பரவி கிடந்தது. புதிய ரயில் பாலம் கட்டுமானத்தில் இருந்து ரசாயன கலவை கடலில் கலந்ததால், கடல்நீரின் நிறம் மாறி உள்ளதாக மீனவர்கள் கூறினர். ஆனால் தென்மேற்கு பருவ காற்று காரணமாக மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி மெலிதாக வளரும் நாட்டிலுக்கா, பூங்கோரை எனும் கடல் பாசிகள் முதிர்ச்சியடைந்து கடல் மேல்மட்டத்திற்கு வந்து நீரில் கலப்பதே காரணம் என தெரியவந்தது. சிலநாட்கள் வரை இந்த பாதிப்பு இருக்கும், அப்போது கடலோரத்தில் உள்ள மீன்கள் சுவாச பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது ரசாயன கலவை இல்லை என மத்திய மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X