'கள்ளக்காதலியுடன் வாழ்வதற்காக மனைவியை எரித்து கொன்றேன்'

Added : அக் 11, 2021 | |
Advertisement
திருப்பத்தூர்: கள்ளக்காதலியுடன் வாழ்வதற்காக, மனைவியை எரித்துக் கொன்றேன் என்று, கைது செய்யப்பட்ட கணவர், போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.திருப்பத்தூர் மாவட்டம், பூங்குளத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 30. இவர், திருப்பத்தூரில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவர் மனைவி திவ்யா, 24. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு வர்ஷினிஸ்ரீ, 3, என்ற பெண்

திருப்பத்தூர்: கள்ளக்காதலியுடன் வாழ்வதற்காக, மனைவியை எரித்துக் கொன்றேன் என்று, கைது செய்யப்பட்ட கணவர், போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், பூங்குளத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 30. இவர், திருப்பத்தூரில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவர் மனைவி திவ்யா, 24. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு வர்ஷினிஸ்ரீ, 3, என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த மாதம், 25ல் கோவிலுக்கு செல்வதாக கூறி, குழந்தையோடு திவ்யாவை சத்தியமூர்த்தி அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. அன்று இரவு, எலவம்பட்டி அருகே சாலையோரம் எரிக்கப்பட்டு கருகி கிடந்த திவ்யாவை போலீசார் மீட்டு, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர் மறுநாள் இறந்தார். விசாரணையில், திவ்யாவை அவரது கணவர் சத்தியமூர்த்தி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. கந்திலி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில், குழந்தை மற்றும் கள்ளக்காதலியுடன், சத்தியமூர்த்தி தஞ்சாவூரில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. போலீசார் கடந்த, 8ல் இரவு, 11:00 மணிக்கு சத்தியமூர்த்தியை கைது செய்து நேற்று முன்தினம் கந்திலிக்கு அழைத்து வந்தனர்.

போலீசாரிடம், சத்தியமூர்த்தி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: திருப்பத்தூரில் நான் நடத்தி வந்த ஓட்டுனர் பள்ளியில், பயிற்சி பெற சென்னையில் நர்சிங் படித்து வந்த அர்ச்சனா, 21, என்ற பெண் வந்த போது பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த திவ்யா கள்ளக்காதலை கைவிடாவிட்டால், போலீசில் புகார் செய்யப் போவதாக கூறினார். இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக என் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டதாக நாடகமாடி, சில நாட்கள் அவருடன் ஜாலியாக இருந்து விட்டு கோவிலுக்கு செல்வதாக எலவம்பட்டிக்கு அழைத்துச் சென்று, குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தேன். மயங்கி விழுந்த அவர் மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு குழந்தையோடு சென்னைக்கு சென்று கள்ளக்காதலி அர்ச்சனாவுடன் கொடைக்கானல், ஊட்டி, திருச்சியில் உல்லாசமாக இருந்து விட்டு, தஞ்சாவூரில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த போது போலீசார் பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கைதான சத்தியமூர்த்தி, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். அவரது குழந்தை, திருப்பத்தூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்திலும், கள்ளக்காதலி அர்ச்சனா பெண்கள் இல்லத்திலும் ஒப்படைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X