துப்பாக்கிமுனையில் பெண்ணிடம் நகைப்பறித்த வடமாநில கொள்ளையர்கள்: ஒருவன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (15) | |
Advertisement
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் பெண்ணிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகையை பறித்து சென்ற வட மாநில கொள்ளையர்களில் ஒருவனை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வயதான பெண்ணிடம் வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, 6 சவரன் நகையை பறித்துச்
Sriperumbudur, Northern Robbers, Encounter, ஸ்ரீபெரும்புதூர், வடமாநில கொள்ளையர்கள், என்கவுன்டர், சுட்டுக்கொலை

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் பெண்ணிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகையை பறித்து சென்ற வட மாநில கொள்ளையர்களில் ஒருவனை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வயதான பெண்ணிடம் வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, 6 சவரன் நகையை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் சுங்கச்சாவடியின் பின்புறம் உள்ள ஏரி பகுதியை நோக்கி தப்பியோடியதாக அங்கிருந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் 10 குழுக்களாக ஏரியை சுற்றி வளைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.


latest tamil news


ஐந்து மணிநேரமாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ஏரியில் பதுங்கியிருந்த ஒரு கொள்ளையனை என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். மேலும் தேடுதலை தீவிரப்படுத்திய போலீசார் அங்கு பதுங்கி இருந்த மேலும் இரு கொள்ளையர்களை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
11-அக்-202117:22:05 IST Report Abuse
M  Ramachandran சபாஷ் சரி யான நடவடிக்கையை. போலீஸுக்கு, நமது ராணுவத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளபடி அதிகாரங்கள் கொடுத்தால் தமிழ்நாட்டில் ரௌடியைகள் தொல்லையகள் நீங்க்கும்.ஆனால் அரசியல் தலையீடு கூடாது.
Rate this:
Cancel
11-அக்-202116:34:29 IST Report Abuse
ஆரூர் ரங் இனி வட மாநில, தென் மாநில என்று குறிப்பிடாமல் செய்தி வெளியிடவும். இல்லையெனில் குற்றவாளிகள் வசித்த ஊர் பெயரை மட்டுமே எழுதவும்🤔. நம் திருச்சி ராம்ஜி நகருக்கு அடிக்கடி மற்ற மாநில போலீஸ் விசாரணைக்கு வரும் போது அங்குள்ள ஊடகங்கள் தமிழ் கொள்ளையர் , தமிழின செம்மரக்கடத்தல் கும்பல் என்று குறிப்பிட்டால் நாம் எவ்வளவு 😪 வருத்தப்படுவோம்?
Rate this:
ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-அக்-202117:04:01 IST Report Abuse
rameshஉன் ஊர்க்காரன் சொன்ன வலிக்குதா...
Rate this:
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
11-அக்-202117:20:49 IST Report Abuse
தமிழன்இனி முஸ்லீம், இந்து தீவிரவாதிகள் என்று சொல்ல வேண்டாமென்று சொல்ல வருகிறீரோ? நியாயமான கருத்துதான்...
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
11-அக்-202116:32:23 IST Report Abuse
JeevaKiran வடமாநிலத்தவனுக்கு தமிழகத்தில் இடம் கொடுத்ததற்கு இதுவும் அனுபவிக்கனும். இன்னும் அனுபவிக்கனும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X