தனியார் நிலத்தில் ரசாயன கழிவு: வாகனங்கள் சிறைபிடிப்பு

Added : அக் 11, 2021 | |
Advertisement
ப.வேலூர்: பரமத்தி அருகே, தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் ரசாயன கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் வாகனங்களை சிறை பிடித்தனர்.ப.வேலூர் தாலுகா, வில்லிபாளையம் பஞ்.,க்குட்பட்ட சுண்ணாம்புக்கல் மேடு பகுதியில், தனியாருக்கு சொந்தமான நிலத்தில் ஒரு ஏக்கர் அளவிற்கு, 10 அடி பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இந்த பள்ளத்தில் கடந்த இரு தினங்களாக, வெள்ளை

ப.வேலூர்: பரமத்தி அருகே, தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் ரசாயன கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் வாகனங்களை சிறை பிடித்தனர்.

ப.வேலூர் தாலுகா, வில்லிபாளையம் பஞ்.,க்குட்பட்ட சுண்ணாம்புக்கல் மேடு பகுதியில், தனியாருக்கு சொந்தமான நிலத்தில் ஒரு ஏக்கர் அளவிற்கு, 10 அடி பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இந்த பள்ளத்தில் கடந்த இரு தினங்களாக, வெள்ளை நிறமுடைய மண் போன்ற பொருளை மூன்று டிப்பர் லாரி லாரி மூலம் கொண்டு வந்து கொட்டி, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளத்தை நிரப்பி வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கேட்டபோது, எம்.சாண்ட் மண்ணின் கழிவை கொட்டி பள்ளத்தை நிரப்புவதாக கூறியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்கு மழை பெய்ததால் நேற்று, அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனால் உஷாரான அப்பகுதி மக்கள், அங்கு கொட்டப்படுவது ரசாயனம் கலந்த உபயோகமற்ற கழிவுபொருள் என தெரிந்து கொண்டனர். அங்கு கழிவுகளை கொட்ட வந்த டிப்பர் லாரி மற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தை, நேற்று மாலை சிறைபிடித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் பரமத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பகுதிவாசிகள் கூறுகையில் 'இங்கு கொட்டப்பட்ட ரசாயன கழிவுகளால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடி தண்ணீர் மற்றும் பாசனத்திற்காக கிணறு, ஆழ்துளை கிணறுகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதுடன், விவசாய நிலங்களும் பாதிக்கப்படும். ரசாயன கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும்' என்றனர். இதுகுறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பொக்லைன் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X