திருப்பதி அடிவாரத்தில் பசுவிற்கான கோவில்

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருமலை திருப்பதி கோவிலின் அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் கோ மந்திர் எனப்படும் பசுவிற்கான சிறப்பு கோயில் இன்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியால் திறக்கப்பட்டது.திருமலை திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினரும்,தமிழகத்தை சேர்ந்தவருமான தொழிலதிபர் ஏஜி சேகர் சுமார் பதினைந்து கோடி ரூபாய் செலவில் இந்த கோவிலைக் கட்டி நன்கொடையாக வழங்கியுள்ளார்.இது



latest tamil news



திருமலை திருப்பதி கோவிலின் அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் கோ மந்திர் எனப்படும் பசுவிற்கான சிறப்பு கோயில் இன்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியால் திறக்கப்பட்டது.
திருமலை திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினரும்,தமிழகத்தை சேர்ந்தவருமான தொழிலதிபர் ஏஜி சேகர் சுமார் பதினைந்து கோடி ரூபாய் செலவில் இந்த கோவிலைக் கட்டி நன்கொடையாக வழங்கியுள்ளார்.


latest tamil news


இது குறித்து அவர் கூறுகையில்...
நீண்ட நாட்களாக நான் திருமலை பெருமாள் பக்தன் அவர் என் வாழ்வில் தந்த ஏற்றத்திற்கும் மாற்றத்திற்கும் நான் செலுத்தும் சிறு காணிக்கைதான் இந்த கோ மந்திர்.


latest tamil news


இந்த கோ மந்திர் எனப்படும் பசுவிற்கான கோவிலில் எப்போது ஏழு பசுக்கள் இருக்கும் பக்தர்கள் வந்து பசுவையும் பசுவுடன் கூடிய கண்ணனையும் வழிபாடு செய்யலாம்.பசுக்கள் ஒய்வு எடுக்க காற்றாடி வசதியுடன் கூடிய அறைகள் ,ஆரோக்யமாக உலாவ சிறு புல்வெளி மைதானம் போன்றவைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் கோ துலாபாரமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது துலாபாரத்தின் ஒரு பக்கம் பசு நிற்கவைக்கப்பட்டு மறுபக்கம் அதன் எடைக்கு நிகரான பொருட்களை பக்தர்கள் கோவிலுக்கு வணங்கலாம்.


latest tamil news


பசுவின் முக்கியத்துவம் மற்றும் அதன் மகத்துவம் குறித்து அறிந்து கொள்ளும் வண்ணம் குறும்படம் ஓன்றும் இங்குள்ள சிறு அரங்கத்தில் பக்தர்கள் பார்க்கமு் வண்ணம் ஒடிக்கொண்டே இருக்கும் அது குறித்த விளக்க கையேடும் கொடுக்கப்படும்.
கோ மந்திரில் உள்ள பசுவோடு கூடிய கிருஷ்ணன் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது, இதே போல கோவில் பெரும்பாலும் கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளது, இரவு விளக்குகள் மத்தியபிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது இதன் ராமம் இரவில் ஒளிரும் தன்மை கொண்டதாகும்.


latest tamil news


பக்தர்களின் வாகன சோதனை நடைபெறும் இடத்திற்கு முன்பாக, நடந்து செல்லும் பக்தர்களுக்கான நுழைவு ராஜகோபுரத்தின் கீழ் பகுதியில் இந்த கோ மந்திர் அமைந்துள்ளது.பக்தர்கள் திருமலைக்கு ஏறும் முன்பாக இங்கே வந்து செல்லலாம்.பசுக்களையும் கிருஷ்ணரையும் வணங்கிச் செல்லலாம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் துலாபாரத்தில் நிறுத்தப்படும் பசுவின் எடைக்கு நிகராக தானியங்கள் வெல்லம் நாணயங்கள் போன்றவைகளை வழங்கவும் செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VTS - Salem,இந்தியா
13-அக்-202111:49:15 IST Report Abuse
VTS மிக்க நன்று ஐயா கோமாதா புண்ணியம் உங்களை சேரும் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X