புதுடில்லி: நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை முன்னதாக மத்திய அரசு டாடா குழுமத்துக்கு விற்றது. இதிலிருந்து மத்திய பாஜ., அரசின் கடமை உணர்வு மற்றும் தீவிரத்தை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்று பிரதமர் மோடி இந்தியன் ஸ்பேஸ் அசோசியேசன் (ஐ.எஸ்.பி.ஏ.,) அமைப்பை துவக்கி வைக்கும் விழாவில் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஐ.எஸ்.பி.ஏ., விஞ்ஞானிகள் குழு மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தனியார்மயமாக்கல் குறித்து பிரதமர் மோடி விரிவாக உரையாற்றினார். முன்னதாக கடும் நிதி நெருக்கடியை சந்தித்த இந்திய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, டாடா குழுமத்துக்கு விற்கப்பட்டது. இதுகுறித்து பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி இந்திய விமான சேவையை தனியார் மயமாக்கியதில் இருந்து மத்திய பா.ஜ., அரசின் கடமை உணர்வு மற்றும் தீவிரத்தை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.

இதேபோல, நஷ்டத்தில் இயங்கிவரும் அரசு நிறுவனங்கள் எதிர்காலத்தில் மக்கள் நலன் கருதி தனியார் மயமாக்கப்படும். இந்திய பங்குதாரர்களின் நல்வாழ்வை கருதியும் வளரும் இளம் தொழிலதிபர்களை ஊக்குவிக்கவும் மத்திய அரசு தனியார் மயமாக்கல் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தொழில்நுட்பத்திலும், விண்வெளி ஆராய்ச்சியிலும் இந்தியாவை மேம்படுத்த ஐ.எஸ்.பி.ஏ., அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அமைப்பில் தனியார் முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அவர் கூறினார். இதன்மூலமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை உலக அளவில் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE