லக்கிம்பூர் வன்முறை வழக்கு : ஆஷிஷ் மிஸ்ராவுக்கு மூன்று நாள் காவல்

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறையில் எட்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு மூன்று நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.உ.பி.,யில் லக்கிம்பூரில் கடந்த வாரம் நடக்கவிருந்த பா.ஜ., கூட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த கார் மோதி,
லக்கிம்பூர், வன்முறை வழக்கு,  ஆஷிஷ் மிஸ்ரா,மூன்று நாள், போலீஸ், காவல்

லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறையில் எட்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு மூன்று நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
உ.பி.,யில் லக்கிம்பூரில் கடந்த வாரம் நடக்கவிருந்த பா.ஜ., கூட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த கார் மோதி, நான்கு விவசாயிகள் பலியாகினர். அந்த காரில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது.


latest tamil news



ஆஷிஷ் மிஸ்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 9ல் விசாரணைக்கு ஆஜரான ஆஷிஷ் மிஸ்ராவிடம் 12 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தி ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்தனர்.அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.


இந்நிலையில், ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, அனுமதி அளிக்கும்படி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு மூன்று நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-அக்-202106:33:22 IST Report Abuse
ராஜா அமைச்சர் மகன் என்றாலும் பாஜக ஆட்சியில் மட்டும் தான் நீதி வெல்லும்.
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
11-அக்-202123:57:43 IST Report Abuse
PRAKASH.P He sould be punished for hanging
Rate this:
12-அக்-202111:06:42 IST Report Abuse
ராஜாகுற்றம் நிரூபிக்கபட்டால் அவரோடு தொழிலாளியை அடித்துக் கொன்ற திமுக எம்பி ரமேசையும் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று எழுதுங்கள் பிரகாஷ்....
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-அக்-202121:11:56 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார், அப்புறம் மூன்று நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. நாளைக்கி யோகி சொல்லி இவர் வெளியே வந்தார்ன்னு செய்தி, அடுத்த நாள் இவருக்கு பத்ம விருதுக்கு நம்ம பிரதமர் பரிந்துரை செய்வார்.. எல்லாம் நன்மைக்கே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X