சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

'பச்சை கலர் புடவை சூப்பராயிருக்குல்ல!'

Added : அக் 11, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
'பச்சை கலர் புடவை சூப்பராயிருக்குல்ல!''நாட்டு மக்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கூறி, சமாளித்து விடலாம்; ஆனால் வீட்டில் உள்ளவர்களை சமாளிப்பது ரொம்ப கஷ்டமான வேலைங்க...' என, சராசரி குடும்ப தலைவனாக பேசுகிறார், கர்நாடக முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பசவராஜ் பொம்மை.சமீபத்தில் காந்தி ஜெயந்தி அன்று பெங்களூரில் உள்ள காதி பவனில் கதராடைகளை வாங்கச் சென்றார்.

அக்கம் பக்கம்


'பச்சை கலர் புடவை சூப்பராயிருக்குல்ல!'


'நாட்டு மக்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கூறி, சமாளித்து விடலாம்; ஆனால் வீட்டில் உள்ளவர்களை சமாளிப்பது ரொம்ப கஷ்டமான வேலைங்க...' என, சராசரி குடும்ப தலைவனாக பேசுகிறார், கர்நாடக முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பசவராஜ் பொம்மை.சமீபத்தில் காந்தி ஜெயந்தி அன்று பெங்களூரில் உள்ள காதி பவனில் கதராடைகளை வாங்கச் சென்றார். 'கதராடைகளை வாங்குவதை மக்களிடம் ஊக்குவிக்க வேண்டும். நான் வாங்கினால், எங்கள் கட்சிக்காரர்களும் வாங்குவர்.

அதனால் தான் நானே கடைக்கு வந்து விட்டேன்' என்றார்.போர்வை உள்ளிட்ட சில கதர் துணிகளை சில நிமிடங்களிலேயே வாங்கிய அவர், கடைசியாக புடவை வைக்கப்பட்டுள்ள இடத்துக்குச் சென்றார்.புடவையை தேர்வு செய்ய நீண்ட நேரம் செலவிட்டார். ஆனாலும், அவருக்கு திருப்தி இல்லை. அருகில் இருந்த அதிகாரி ஒருவர், 'சார், நேரமாகிறது' என, காதை கடித்தார். முதல்வரோ, 'சும்மா இருங்க சார்; நல்ல 'டிசைன்' புடவையை வாங்கிச் செல்லவில்லை என்றால், மனைவி என்னை இரண்டில் ஒன்று பார்த்து விடுவார்; எவ்வளவு நேரமானாலும் பராவாயில்லை' என கூறி, மீண்டும் புடவையை தேர்வு செய்வதில் தீவிரமானார். அந்த அதிகாரியோ, 'நாட்டுக்கு முதல்வராக இருந்தாலும், வீட்டுக்குள் நுழைந்தால், மனைவி சொல் தானே மந்திரம்' என, முணுமுணுத்தபடியே, 'சார், அந்த பச்சை கலர் 'பார்டர்' வைத்த புடவை சூப்பரா இருக்குல்ல...' என, முதல்வருக்கு உதவினார்.



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர் தமிழகமே - Ameerpet Hyderabad,இந்தியா
13-அக்-202102:12:23 IST Report Abuse
என்னுயிர் தமிழகமே பச்ச கலரு ஜின்குச்சா என்ற வரிகள் நினைவுக்கு வருது
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-அக்-202118:58:29 IST Report Abuse
D.Ambujavalli மனைவிக்குப் புடவை எடுக்கும் 'தீரச்செயல்' உள்ள அந்த அமைச்சருக்கு ஒரு பெரிய 'ஓ ' போடுவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X