சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : அக் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக பா.ஜ., கலாசார பிரிவு தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை: எம்.பி.,யாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பிராமணர்களை எப்படி 'ரவுடிகள்' என குறிப்பிடலாம்? இப்படி பேசியதால் தானே, 'மாடலிங்' நடிகை மீரா மிதுன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது? சட்டம் எல்லாருக்கும் சமம். எனவே, திருமாவளவன் மீதும் வழக்கு பதியப்பட வேண்டும்.நியாயமான கோரிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக பா.ஜ., கலாசார பிரிவு தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை: எம்.பி.,யாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பிராமணர்களை எப்படி 'ரவுடிகள்' என குறிப்பிடலாம்? இப்படி பேசியதால் தானே, 'மாடலிங்' நடிகை மீரா மிதுன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது? சட்டம் எல்லாருக்கும் சமம். எனவே, திருமாவளவன் மீதும் வழக்கு பதியப்பட வேண்டும்.நியாயமான கோரிக்கை தான். பூனைக்கு மணி கட்டுவது யார்?


'நாம் தமிழர்' என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி:
குமரி மாவட்டத்தில் உள்ள சிறு மலைகளை உடைத்து, பாறைகளாக கேரளாவுக்கு கடத்திச் செல்கின்றனர். அரசுக்கு தெரிந்து தான் இது நடக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல், குமரி மாவட்டம் பாலைவனமாகி விடும்.தலைநகரில் உட்கார்ந்தபடி, அறிக்கை விடாமல், குமரிக்கே சென்று போராட்டம் நடத்தி, அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது வரவேற்கத்தக்கதே!


தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் அறிக்கை:
பறையர், துலுக்கர், அம்பட்டர் என்ற ஜாதிய சொற்கள் தற்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். அதுபோல, பெரும்பாலான பிராமணர்கள் விரும்பாத, 'பார்ப்பனர்' என்ற சொல்லையும் தவிர்த்தல் நாகரிகம். அதை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பின்பற்றுவார் என நம்புகிறேன்.அவர் எப்படி பின்பற்றுவார்... மூச்சுக்கு மூன்று தரம், பாப்பான் என பேசி, அவரின் ஆதரவாளர்களை குஷிப்படுத்தினால் தானே, 'அண்ணனுக்கு ஜே' என்பர்!

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேட்டி: தே.மு.தி.க., அதே எழுச்சியோடு தான் செயல்படுகிறது. வெற்றி, தோல்வி வந்து போகும். மீண்டும் தே.மு.தி.க.,வை துாக்கி நிறுத்துவோம். தொண்டர்கள் அப்படியே தான் இருக்கின்றனர். தே.மு.தி.க., ஆரம்பித்ததன் லட்சியம் நோக்கி பயணிப்போம்.கட்சியிலிருந்து முக்கிய பிரமுகர்கள், தொண்பர்கள் பலரும் ஓடிய பின், 'கட்சி அப்படியேத் தான் இருக்கிறது' என்று சொன்னால், கேட்பவர்களுக்கு ஞானம் இல்லை என நினைத்து விட்டீர்களா... சரி, கட்சி ஆரம்பித்த லட்சியத்தை கொஞ்சம் சொல்லுங்கள்!


தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை:
'ஏர் இந்தியா' நிறுவனம், 'டாடா இந்தியா' ஆகி விட்டது. பொதுத்துறைகளை பெருமுதலாளிகளுக்கு தாரை வார்க்கவே ஆட்சியில் அமர்த்தப்பட்டிருக்கிறார் பிரதமர் மோடி. கேட்டால் நஷ்டத்தில் இயங்குகிறது என்கின்றனர். நஷ்டத்தில் இயங்குவதை டாடா வாங்குவது ஏன்; அவரால் லாபம் பெற முடியும் என்றால் அரசால் முடியாதா?கம்யூ.,க்களிடம் அது குறித்த திட்டம் இருந்தால், மோடி அரசிடம் சொல்லி இருக்கலாமே... தனியார் நிறுவனங்களை மூடிய பெருமை தான், நமக்கு உண்டு. காப்பாற்றியது எல்லாம் கிடையாதே!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ellar - New Delhi,இந்தியா
12-அக்-202119:34:57 IST Report Abuse
ellar அருணன் அடித்தது "சோக்" நீங்கள் குடுத்தது "சாக்" "பெட்டி" கிடைச்ச அதிர்ஷ்டத்தில் தூங்காமல் எதுக்கு இப்படி வெக்கமில்லாமல் உளறல்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X