பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 11, 2021
Share
Advertisement
அக்., 12, 1891நெல்லை மாவட்டம் சிக்கநரசய்யன்பேட்டையில் 1891- அக்., 12-ல் பிறந்தவர், வையாபுரிப் பிள்ளை. சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் பட்டம் பெற்றார். சென்னை மாகாணத்திலேயே தமிழில் அதிக மதிப்பெண் பெற்று, 'சேதுபதி தங்க பதக்கம்' பெற்றார். பின் திருவனந்தபுரத்தில் சட்டம் பயின்று, வழக்கறிஞரானார். இவர் எழுதிய கட்டுரைகள், இலக்கிய ஆய்வுகள் பெரும் வரவேற்பை பெற்றன.

இதே நாளில் அன்று


அக்., 12, 1891



நெல்லை மாவட்டம் சிக்கநரசய்யன்பேட்டையில் 1891- அக்., 12-ல் பிறந்தவர், வையாபுரிப் பிள்ளை. சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் பட்டம் பெற்றார். சென்னை மாகாணத்திலேயே தமிழில் அதிக மதிப்பெண் பெற்று, 'சேதுபதி தங்க பதக்கம்' பெற்றார். பின் திருவனந்தபுரத்தில் சட்டம் பயின்று, வழக்கறிஞரானார். இவர் எழுதிய கட்டுரைகள், இலக்கிய ஆய்வுகள் பெரும் வரவேற்பை பெற்றன. உ.வே.சாமிநாதய்யருக்கு பின், பழந்தமிழ் இலக்கியங்களை தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்டார். சென்னை பல்கலை, தமிழ் ஆராய்ச்சி துறை தலைவர் மற்றும் திருவிதாங்கூர் பல்கலை தமிழ் துறை தலைவர் போன்ற பதவிகளை வகித்தார். சென்னை பல்கலை வெளியிட்ட, பேரகராதியின் ஆக்கக், குழு தலைவராகவும், தமிழ் நுாற்பதிப்பு துறை பதிப்பாசிரியராகவும் இருந்தார்.
தன்னிடம் இருந்த, 3,000க்கும் மேற்பட்ட நுால்கள், ஓலைச் சுவடிகளை கோல்கட்டா தேசிய நுாலகத்திற்கு நன்கொடையாக அளித்தார். 1956 பிப்., 17ல், தன், 65வது வயதில் காலமானார்.தமிழறிஞர் ச.வையாபுரிப் பிள்ளை பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X