படிப்பு தவிர மற்ற திறன்களையும் பழகுங்கள்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

படிப்பு தவிர மற்ற திறன்களையும் பழகுங்கள்!

Added : அக் 11, 2021 | கருத்துகள் (1)
Share
இளம் பருவத்தினருக்கு ஊக்கம் கொடுத்து, அறிவுரை கூறும் முனைவர் சுடர்க்கொடி கண்ணன்: ஒரு மாணவர், தான் படிக்கும் காலத்தை எவ்வாறு செலவிடுகிறான் என்பதைப் பொறுத்து தான் அவன் எதிர்காலம் அமையும்.படிப்போடு சேர்ந்து இசை, ஓவியம், விளையாட்டு, நாட்டியம் என பல துறைகளில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்லுாரிக்குள் நுழையும்போதே உங்கள் சிந்தனையைப் பரவலாக்கி, வெளி உலகைப்
சொல்கிறார்கள்

இளம் பருவத்தினருக்கு ஊக்கம் கொடுத்து, அறிவுரை கூறும் முனைவர் சுடர்க்கொடி கண்ணன்: ஒரு மாணவர், தான் படிக்கும் காலத்தை எவ்வாறு செலவிடுகிறான் என்பதைப் பொறுத்து தான் அவன் எதிர்காலம் அமையும்.படிப்போடு சேர்ந்து இசை, ஓவியம், விளையாட்டு, நாட்டியம் என பல துறைகளில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்லுாரிக்குள் நுழையும்போதே உங்கள் சிந்தனையைப் பரவலாக்கி, வெளி உலகைப் பற்றிய பார்வையை விரிவாக்கி, வாழ்வதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வதில் தான், வெற்றியும், தோல்வியும் அடங்கியுள்ளது.நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டும்.

இலக்குகளை சரியான முறையில் திட்டமிட்டு, அதை நிறைவேற்ற, விடா முயற்சியுடன் உழைக்க வேண்டும். இலக்கில்லாத பயணம் வீணானது.கல்வியையும், ஒழுக்கத்தையும் இரு கண்களாகக் கடைபிடிக்க வேண்டும். சிறந்த சிந்தனைகளை வளர்த்து, நேர்மையுடன், சமூக பொறுப்பு உடையவனாக வளர வேண்டும். கவனமாக இல்லாவிட்டால், வாழ்க்கைப் பாதையில் வழுக்கி விழ நேரிடும். பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது, பல நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்கப் பழக வேண்டும். நீதிக் கதைகள், அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளை படிப்பது போன்றவை, உங்கள் சிந்தனைகளை நெறிப்படுத்தும். வாசிப்பு, உங்கள் வாழ்க்கையை வளமாக்கும்.கல்லுாரியில் முடிந்தவரை, 'அரியர்' வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து அரியல் வைத்தால், கடைசி செமஸ்டரில் படிக்க முடியாமல், கல்லுாரியை விட்டு வெளியேறிய பிறகு கூட படிக்க நேரும்.காதல் தோல்விகள் தற்கொலைக்குத் துாண்டும். எனவே, படிக்கும் பருவத்தில் காதல் வலையில் வீழ்வதைத் தவிர்க்க வேண்டும்.

சமூக வலைதளங்களை அளவாகப் பயன்படுத்த வேண்டும். சிலந்தி வலையில் சிக்குவது போல், முகநுால் வலையில் சிக்க வேண்டாம். போலிப் பதிவர்களிடம் சிக்கினால், பொருள் இழந்து, மானம் இழந்து, தற்கொலை செய்து கொள்ள நேரிடும்.கல்லுாரி மாணவர்கள் அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். தேவையான உடற்பயிற்சிகள், அளவான துாக்கம் ஆகியவை இன்றியமையாதது.கல்லுாரி காலத்திலேயே கடும் உழைப்பும், விடா முயற்சியும், மனோதிடமும் கொண்டு, சவால்களைச் சந்தித்து சாதனைகளாக மாற்றுங்கள்; எதிர்காலத்தில் கால்களை விண்ணில் பதிக்க முடியும்!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X