விண்வெளி துறையில் தனியார் நிறுவனம் :புதிய திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

Updated : அக் 13, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (6+ 46)
Share
Advertisement
புதுடில்லி :விண்வெளி துறையில் தனியார் பங்கேற்கும் விதமாக, பல்வேறு பெரு நிறுவனங்கள் ஒன்றிணைந்து துவங்கப்பட்டுள்ள, 'இஸ்பா' எனப்படும், இந்திய விண்வெளி சங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். 'ஏர் - இந்தியா' செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் நவீன வளர்ச்சிகளை ஏற்படுத்துவதற்காக விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த மத்திய அரசு
விண்வெளி துறை, தனியார் நிறுவனம், புதிய திட்டம்,

புதுடில்லி :விண்வெளி துறையில் தனியார் பங்கேற்கும் விதமாக, பல்வேறு பெரு நிறுவனங்கள் ஒன்றிணைந்து துவங்கப்பட்டுள்ள, 'இஸ்பா' எனப்படும், இந்திய விண்வெளி சங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.


'ஏர் - இந்தியா'


செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் நவீன வளர்ச்சிகளை ஏற்படுத்துவதற்காக விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதன் முதல்கட்டமாக பல்வேறு உள்நாட்டு மற்று வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் இணைந்து, 'இஸ்பா' எனப்படும் இந்திய விண்வெளி சங்கம் துவங்கப்பட்டுள்ளது.

'லார்சன் அண்ட் ட்யூப்ரோ, டாடா குழுமத்தின் நெல்கோ, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒன் வெப், கோத்ரெஜ்' உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த சங்கத்தை உருவாக்கி உள்ளன. இதன் துவக்க விழா டில்லியில் நேற்று நடந்தது.

இதை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:எந்தெந்த துறைகளில் பொதுத்துறை நிறுவனங்கள் தேவை இல்லையோ, அதை தனியாருக்கு திறந்து விடுவதே மத்திய அரசின் கொள்கை. அந்த அடிப்படையில் தான் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த, 'ஏர் - இந்தியா' நிறுவனம் தனியாருக்கு வழங்கப்பட்டது.இது போல, உறுதியான முடிவுகளை எடுக்கும் அரசு, நம் நாட்டில் இதுவரை ஆட்சியில் இருந்ததில்லை.


முக்கிய கொள்கைதேசிய நலனை மனதில் வைத்தே, விண்வெளி துறை முதல் ராணுவம் வரை, மத்திய அரசு தனியாரை ஈடுபடுத்த துவங்கி உள்ளது. 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தின் குறிக்கோள் மிக தெளிவாக இருப்பதால் அனைத்து துறைகளிலும் பெரிய அளவிலான சீர்திருத்தங்களை காண முடிகிறது.
விண்வெளி துறையில் தனியாரை ஈடுபடுத்துவதில், நான்கு முக்கிய கொள்கைகளில் அரசு உறுதியாக உள்ளது. தனியார் துறையின் புதுமைகளை அனுமதிப்பது, அதை செயல்படுத்துபவராக அரசு இருப்பது, இளைஞர்களை எதிர்காலத்துக்கு தயார் செய்வது, சாமானிய மக்களின் வளர்ச்சிக்கு தேவையான வளங்களை உருவாக்குவது ஆகியவை முக்கியம். இதில் அரசு சமரசம் செய்யாது. இவ்வாறு அவர் பேசினார்.


2022ல் செயற்கைக்கோள் 'ஒன் வெப்' அறிவிப்பு!'இஸ்பா' எனப்படும் இந்திய விண்வெளி சங்கத்தில் பார்தி ஏர்டெல் குழுமத்தின், 'ஒன் வெப்' நிறுவனமும் உள்ளது. இந்த நிறுவனம் தங்களுக்குச் சொந்தமான செயற்கைக்கோள்களை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இது குறித்து, 'ஒன் வெப்' நிறுவனம் நேற்று அறிக்கை வெளியிட்டது.


சிறந்த தொழில்நுட்பம் வேண்டும்!போர் காலங்கள் மட்டுமின்றி இதர நேரங்களிலும் விண்வெளி, இணைய வெளிகளின் செயல்பாடு ராணுவத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே இதில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், நம் படைகளுக்கு மேலும் வலுவூட்டும் விதமான மிகச் சிறந்த விண்வெளி தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும்.பிபின் ராவத், முப்படைகளின் தலைமை தளபதி

Advertisement
வாசகர் கருத்து (6+ 46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
12-அக்-202119:42:40 IST Report Abuse
Rajagopal அமெரிக்காவில் போயிங், லாக்ஹீட் மார்ட்டின், நார்த்ரப் என்று பல தனியார் நிறுவனங்கள் பல வருடங்களாக ராணுவத்துக்கும், விண்வெளித் துறைக்கும் பாகங்கள் தயாரித்து விற்பனை செய்கின்றன. அவ்ரகளுக்குள்ளே கடும் போட்டி. அதனால் உற்பத்தியாகும் தடவாளம் மிகவும் உயர்ந்த தரத்தோடு, விலை குறைவாக இருக்கும். அவர்கள் அதில் செய்த ஆராய்ச்சியை வைத்து, மக்களுக்கு உண்டான பல பொருட்களை செய்து விற்க முடிகிறது. நாம் உபயோகிக்கும் இன்டெர் நெட் டார்ப்பா என்கிற ராணுவ ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வந்தது. இதே போல செல் போன் தொழில் நுட்பம், காமிரா தொழில் நுட்பம், மைக்ரோ வேவ் போன்றவையும் இந்த மாதிரி ராணுவ ஆராய்ச்சியிலிருந்து சாதாரண மார்க்கெட்டுக்கு வந்தவை. தனியார் துறைதான் வளர்ச்சியைக் கொடுக்கும். கடும் போட்டி வேண்டும். அதில்தான் எல்லாவற்றிலும் உயர்ந்த ரகம் உண்டாக முடியும். மோடியின் அரசு நல்ல முடிவுகளை எடுத்து வருகிறது. இந்தியா ஜப்பான், அமெரிக்கா மாதிரி தொழில் வளம் பெற வேண்டுமானால் தனியார் துறையை வளர்த்து, ஊக்கமளிக்க வேண்டும். அரசாங்கம் அதற்குண்டான சட்டதிட்டங்கள், வரி வரைமுறைகள், ஊக்கமளித்து போன்றவற்றை மட்டும் செய்தால் போதும்.
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
12-அக்-202111:19:37 IST Report Abuse
Sandru அந்த தனியார் யார் . அடானிய அல்லது அம்பானியா .
Rate this:
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
12-அக்-202113:06:54 IST Report Abuse
 N.Purushothamanசெய்தியை படிக்கமாத்தான் கருத்து போடறீங்க போல ....இந்த பொழப்புக்கு தான் இருநூறு ஊவா கொடுக்கறாங்க போல ......
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
12-அக்-202110:57:06 IST Report Abuse
pradeesh parthasarathy போச்சு டா. இதுவும் அப்போ அதானி கையில தான ... சங்கிகளுக்கு கொண்டாட்டம் தானே ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X